முக்கிய அறிவிப்பு:

இத்தளத்தில் இடம்பெறும் இஸ்லாமிய ஆக்கங்களை பதிவிறக்கம் செய்யலாம், பிறருக்கு Facebook,Twitter, Whatsapp,Telegram etc., எந்த தளத்திலும் பகிரலாம், பிறர் பயன்பெற எந்த வகையிலும் எவரும் பயன்படுத்திக் கொள்ளலாம், எம்மிடம் அனுமதி பெற வேண்டியதில்லை. எம் மூலம் நீங்கள் அறிந்த செய்தி, உங்களால் பிறருக்கு எத்தி வைக்கப்படும் போது உங்களுக்கும் நன்மை உண்டு, எமக்கும் நன்மை உண்டு, அல்லாஹ் போதுமானவன். குறிப்பு: இத்தளத்தில் எம்மை அறியாமல் பலவீனமான செய்திகளோ, மொழிபெயர்ப்புத் தவறுகளோ, வேறு பிழைகளோ இடம் பெற்றிருப்பின் சுட்டிக் காட்டவும், இன்ஷா அல்லாஹ் திருத்திக் கொள்ளப்படும்.

Monday, May 25, 2020

ரமலானின் அமல்களை விட்டுவிடாதீர்கள்...

எவர் (பாவங்களை விட்டு விலகிப்) பரிசுத்தவானாக ஆனாரோ அவர், நிச்சயமாக வெற்றி பெற்றார்.
அவன் தன் இறைவனின் திருப்பெயரை நினைவு செய்து கொண்டும், தொழுது கொண்டுமிருப்பார்.
எனினும், நீங்களோ (மறுமையை விட்டுவிட்டு) இவ்வுலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றீர்கள்.
மறுமையின் வாழ்க்கைத்தான் மிக்க மேலானதும் நிலையானதுமாகும்.
குர்ஆன் : 87:14-17

ஷவ்வால் மாதம்

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை ஷவ்வால் மாதத்தில் மணந்து கொண்டார்கள்; ஷவ்வால் மாதத்திலேயே என்னுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியரில் அவர்களுடன் என்னைவிட அதிக நெருக்கத்திற்குரியவர் யார்?
இதன் அறிவிப்பாளரான உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
ஆயிஷா (ரலி) அவர்கள் தங்கள் (குடும்பப்) பெண்களை ஷவ்வால் மாதம் (மணமுடித்து) அனுப்பிவைப்பதையே விரும்புவார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம் : 2782.

ஷவ்வால் 6நோன்பு

Friday, May 22, 2020

இறையருள் தூரமாகட்டும்

நன்மையை அள்ளும் பிரார்த்தனை(துஆ) - 30

👇  *நன்மையை அள்ளும் பிரார்த்தனை(துஆ) - 30*

*அல்லாஹ்வுக்கு பிரியமான இரண்டு வாக்கியங்கள்*
🌍 *இஸ்லாமிய அலை Telegram:*
இணைய 👇
https://t.me/joinchat/Ki5UbRxMJl4NiEWZTFiurw

Thursday, May 21, 2020

நன்மையை அள்ளும் பிரார்த்தனை(துஆ) - 29

👇  *நன்மையை அள்ளும் பிரார்த்தனை(துஆ) - 29*

*துன்னூன் - மீனுடையவர்  (யூனுஸ் நபி) செய்த பிரார்த்தனை*

🌍 *இஸ்லாமிய அலை Telegram:*
இணைய 👇
https://t.me/joinchat/Ki5UbRxMJl4NiEWZTFiurw

Wednesday, May 20, 2020

நோன்புப் பெருநாள் - ரம்ஜான் 2020

🏡 *நோன்புப் பெருநாள் - ரம்ஜான் 2020* 🏡

*ஊரடங்கு பெருநாள்  வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளதால், இயல்பு நிலை  பெருநாள் வரை திரும்பாமல் இருப்பதால் பெருநாளை வீட்டிலேயே கொண்டாட வேண்டும்.*                             பிறை பார்த்ததிலிருந்து பெருநாளின் தக்பீர் கூறுவது, குளிப்பது, தொழுகைக்கு முன்னால் பேரித்தம் பழங்களை உண்ணுவது, ஃபித்ராவை வழங்குவது, தொழுகைக்குப் பின்பு பொதுவான தான தர்மங்களில் ஈடுபடுவது, உறவினர்களோடு வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வது போன்றவற்றை வீட்டில் இருந்த படியே செய்து கொள்ள வேண்டும்.

*ஃபித்ராவாக உணவு தானியங்களை இரண்டரை அல்லது மூன்று கிலோ  வழங்கவேண்டும்.* ஃபித்ராவை பெருநாளுக்கு ஓரிரு தினங்களுக்கு முன்பும் வழங்கலாம். ஆக பெருநாள் தொழுகைக்கு முன்பே அதனை  உரியவர்களிடம் சேர்த்து  விட வேண்டும்.

*பெருநாள் அன்று வீட்டிலேயே கூடுதலான 12 தக்பீர்களோடு* (முதல் ரக்அத்தில் சூரத்துல் ஃபாத்திஹாவிற்கு முன்னால் ஏழு தக்பீர்களும், இரண்டாவது ரக்அத்தில் சூரத்துல் பாத்திஹாவிற்கு முன்னால் 5 தக்பீர்களும்) கிராஅத்தை சப்தமாக ஓதி பெருநாள் தொழுகையை இரண்டு ரக்அத்துகளாக ஜமாஅத்தோடு நிறைவேற்ற வேண்டும்.  வீட்டில் உள்ள ஆண் இமாமாக நின்று மற்றவர்களுக்கு  தொழுகையை நடத்த வேண்டும். (மாதவிடாய் பெண்கள் தொழுகையை தவிர்த்து மற்ற காரியங்களில் குடும்பத்துடன் இணைந்து இருப்பார்கள்). *இந்த இரண்டு ரக்அத்துகளை தவிர்த்து குத்பா, முன் பின் சுன்னத்துகள் கிடையாது.*  சூரியன் உதயமாகி அரைமணி நேரத்திற்கு பிறகிலிருந்து உச்சியை அடைவதற்கு முன்பு வரை பெருநாள் தொழுகை யை நிறைவேற்றுவதற்கான நேரமாகும்.

பெருநாள் அன்றும், அதற்குப் பிறகும் உறவினர்களை சந்தித்து (வாழ்த்துகளை பரிமாறும்)போது தனிநபர் இடைவெளியை கடைப்பிடித்த வண்ணமும், அரசு சார்பாக வழங்கப்படக்கூடிய வழிகாட்டல்களை முழுமையாக பின்பற்ற வேண்டும். முடிந்தால் மொபைல் மற்றும் சமூக ஊடகங்களை இதற்காக அனுமதிக்கப்பட்ட முறையில் பயன்படுத்திக் கொள்ளவும்.


நமது வணக்க வழிபாடுகளில், தற்போது ஏற்பட்டிருக்கும் தொற்றுநோய் நீங்குவதற்காகவும், உலக மக்களின் சகல விதமான கஷ்டங்கள் நீங்குவதற்காகவும் அதிக அதிகமாக பிரார்த்தனை செய்ய வேண்டும்.
இறைவன், அனைவரையும் பாதுகாப்பானாக!!! மேலும், நமது அமல்களை ஏற்றுக் கொள்வானாக!!! ஆமீன்.

*நாம் அனைவரும் பொறுப்பாளர்களே* 

🌍 *இஸ்லாமிய அலை Telegram:*
 👇
https://t.me/joinchat/Ki5UbRxMJl4NiEWZTFiurw

நன்மையை அள்ளும் பிரார்த்தனை(துஆ) - 28

Tuesday, May 19, 2020

நன்மையை அள்ளும் பிரார்த்தனை(துஆ) - 27

👇  *நன்மையை அள்ளும் பிரார்த்தனை(துஆ) - 27*

*பாங்குக்கு பதில் கூறுபவர் சொர்க்கத்தில் நுழைந்துவிட்டார்.*


🌍 *இஸ்லாமிய அலை Telegram:*
இணைய 👇
https://t.me/joinchat/Ki5UbRxMJl4NiEWZTFiurw

Monday, May 18, 2020

நன்மையை அள்ளும் பிரார்த்தனை(துஆ) - 26

👇  *நன்மையை அள்ளும் பிரார்த்தனை(துஆ) - 26*

*சொர்க்கத்தில் நுழைய வேண்டுமா? ஸலாத்தைப் பரப்புங்கள்*

🌍 *இஸ்லாமிய அலை Telegram:*
இணைய 👇
https://t.me/joinchat/Ki5UbRxMJl4NiEWZTFiurw

இறையச்சம் உடையவர்கள்

இறையச்சம் உடையவர்கள் :

நிச்சயமாக! இறையச்சம் உடையவர்கள் இதற்கு முன்னர் நன்மையே செய்து கொண்டிருந்தார்கள்.
(அல்குர்ஆன் : 51:16)

இறையச்சம் உடையவர்கள்  இரவில் வெகு சொற்ப (நேர)மே நித்திரை செய்வார்கள்.
அவர்கள் விடியற்காலை நேரத்தில் (எழுந்து இறைவனை வணங்கி, தங்கள் இறைவனிடம்) மன்னிப்புக் கோரிக் கொண்டிருப்பார்கள்.
அவர்களுடைய பொருள்களில் (வாய் திறந்து யாசகம்) கேட்பவர்களுக்கும், கேட்காதவர்களுக்கும் பாகமுண்டு.
(அல்குர்ஆன் : 51:17-19)

இத்தகைய இறையச்சம் உடையவர்கள் (தங்கள் இறைவனை நோக்கி) "எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் உன்னை நம்பிக்கை கொள்கின்றோம். ஆதலால் நீ எங்களுடைய பாவங்களை மன்னித்து (அருள் புரிந்து, நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் எங்களை காப்பாற்றுவாயாக!" என்றும் (தொடர்ந்து) பிரார்த்தித்துக் கொண்டிருப்பார்கள்.
(அல்குர்ஆன் : 3:16)

அன்றி (இறையச்சம் உடையவர்கள்) பொறுமையாளர்களாகவும், உண்மையே  பேசுகின்றவர்களாகவும், (இறைவனுக்கு) முற்றிலும் வழிப்பட்டு நடப்பவர்களாகவும், தானம் செய்கின்றவர்களாகவும், "ஸஹர்" நேரங்களில் (வைகறைப் பொழுதில் அல்லாஹ்விடம்) மன்னிப்புக் கோருகின்றவர்களாகவும் இருக்கின்றனர்.
(அல்குர்ஆன் : 3:17)

உங்கள் இறைவனின் மன்னிப்புக்கும், சுவர்க்கத்துக்கும் விரைந்து செல்லுங்கள். அதன் விசாலம் வானங்கள், பூமியின் விசாலத்தைப் போன்றது. (அது) இறை அச்சம் உடையவர்களுக்காக(வே) தயார்படுத்தப்பட்டுள்ளது.
(அல்குர்ஆன் : 3:133)

இறையச்சம் உடையவர்கள்  (எத்தகையவர்கள் என்றால்) செல்வ நிலைமையிலும், வறுமை நிலைமையிலும் தானம் செய்து கொண்டே இருப்பார்கள். கோபத்தை விழுங்கி விடுவார்கள். மனிதர்(களின் குற்றங்)களை மன்னித்து விடுவார்கள். அல்லாஹ் (இத்தகைய) அழகிய குணமுடையவர்களை நேசிக்கின்றான்.
(அல்குர்ஆன் : 3:134)

அன்றி, இறையச்சம் உடையவர்கள் யாதொரு மானக்கேடான காரியத்தைச் செய்து விட்டாலும் அல்லது தங்களுக்குத் தாங்களே தீங்கிழைத்துக் கொண்டாலும் உடனே அல்லாஹ்வை நினைத்து (அவனிடமே) தங்களுடைய பாவமன்னிப்பைத் தேடுவார்கள். (அல்லாஹ்வும் அவர்களை மன்னித்து விடுவான்.) அல்லாஹ்வையன்றி (இத்தகையவர்களின்) குற்றங்களை மன்னிப்பவன் யார்? அவர்கள் செய்த (தவறான) காரியத்தை (தவறென்று) அவர்கள் அறிந்து கொண்டால் அதில் நிலைத்திருக்கவும் மாட்டார்கள். (உடனே அதில் இருந்து விலகி விடுவார்கள்.)
(அல்குர்ஆன் : 3:135)

Moon Phases

Quran Search

Search in the Quran
Search in the Quran:
in
Download Islamic Softwares FREE | Free Code
தமிழில் தேட http://www.tamililquran.com/quransearch.php

Hadith Search

Search in the Hadith
Search:
in
Download | Free Code
தமிழில் தேட http://www.tamililquran.com/bukharisearch.php

Muslim Baby Names for Boys and Girls

Search Muslim Baby Names for Boys and Girls
Find Name:
Show all the Boy Names
A B C D E F G H I J K L M N
O P Q R S T U V W X Y Z
Show all the Girl Names
A B C D E F G H I J K L M N
O P Q R S T U V W X Y Z

English to Arabic to English Dictionary

English to Arabic to English Dictionary
Find word:
Exact Word / Starting Word Sub Word
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Download Dictionary on Mobile Phone
www.SearchTruth.com