🏡 *நோன்புப் பெருநாள் - ரம்ஜான் 2020* 🏡
*ஊரடங்கு பெருநாள் வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளதால், இயல்பு நிலை பெருநாள் வரை திரும்பாமல் இருப்பதால் பெருநாளை வீட்டிலேயே கொண்டாட வேண்டும்.* பிறை பார்த்ததிலிருந்து பெருநாளின் தக்பீர் கூறுவது, குளிப்பது, தொழுகைக்கு முன்னால் பேரித்தம் பழங்களை உண்ணுவது, ஃபித்ராவை வழங்குவது, தொழுகைக்குப் பின்பு பொதுவான தான தர்மங்களில் ஈடுபடுவது, உறவினர்களோடு வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வது போன்றவற்றை வீட்டில் இருந்த படியே செய்து கொள்ள வேண்டும்.
*ஃபித்ராவாக உணவு தானியங்களை இரண்டரை அல்லது மூன்று கிலோ வழங்கவேண்டும்.* ஃபித்ராவை பெருநாளுக்கு ஓரிரு தினங்களுக்கு முன்பும் வழங்கலாம். ஆக பெருநாள் தொழுகைக்கு முன்பே அதனை உரியவர்களிடம் சேர்த்து விட வேண்டும்.
*பெருநாள் அன்று வீட்டிலேயே கூடுதலான 12 தக்பீர்களோடு* (முதல் ரக்அத்தில் சூரத்துல் ஃபாத்திஹாவிற்கு முன்னால் ஏழு தக்பீர்களும், இரண்டாவது ரக்அத்தில் சூரத்துல் பாத்திஹாவிற்கு முன்னால் 5 தக்பீர்களும்) கிராஅத்தை சப்தமாக ஓதி பெருநாள் தொழுகையை இரண்டு ரக்அத்துகளாக ஜமாஅத்தோடு நிறைவேற்ற வேண்டும். வீட்டில் உள்ள ஆண் இமாமாக நின்று மற்றவர்களுக்கு தொழுகையை நடத்த வேண்டும். (மாதவிடாய் பெண்கள் தொழுகையை தவிர்த்து மற்ற காரியங்களில் குடும்பத்துடன் இணைந்து இருப்பார்கள்). *இந்த இரண்டு ரக்அத்துகளை தவிர்த்து குத்பா, முன் பின் சுன்னத்துகள் கிடையாது.* சூரியன் உதயமாகி அரைமணி நேரத்திற்கு பிறகிலிருந்து உச்சியை அடைவதற்கு முன்பு வரை பெருநாள் தொழுகை யை நிறைவேற்றுவதற்கான நேரமாகும்.
பெருநாள் அன்றும், அதற்குப் பிறகும் உறவினர்களை சந்தித்து (வாழ்த்துகளை பரிமாறும்)போது தனிநபர் இடைவெளியை கடைப்பிடித்த வண்ணமும், அரசு சார்பாக வழங்கப்படக்கூடிய வழிகாட்டல்களை முழுமையாக பின்பற்ற வேண்டும். முடிந்தால் மொபைல் மற்றும் சமூக ஊடகங்களை இதற்காக அனுமதிக்கப்பட்ட முறையில் பயன்படுத்திக் கொள்ளவும்.
நமது வணக்க வழிபாடுகளில், தற்போது ஏற்பட்டிருக்கும் தொற்றுநோய் நீங்குவதற்காகவும், உலக மக்களின் சகல விதமான கஷ்டங்கள் நீங்குவதற்காகவும் அதிக அதிகமாக பிரார்த்தனை செய்ய வேண்டும்.
இறைவன், அனைவரையும் பாதுகாப்பானாக!!! மேலும், நமது அமல்களை ஏற்றுக் கொள்வானாக!!! ஆமீன்.
*நாம் அனைவரும் பொறுப்பாளர்களே*
🌍 *இஸ்லாமிய அலை Telegram:*
👇
https://t.me/joinchat/Ki5UbRxMJl4NiEWZTFiurw
No comments:
Post a Comment