Thinam Oru Quran Vasanam - தினம் ஒரு குர்ஆன் வசனம் (51-100)
அவனையன்றி (வேறு
எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மைசெய்யவேண்டும் என்றும்
உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில்ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்துவிட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் -அவ்விருவரையும்
(உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும்அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக!-குர்ஆன் 17:23.
“இன்னும், நிச்சயமாக (சன்மார்க்கமான)
உங்கள் சமுதாயம் (முழுவதும்) ஒரே சமுதாயம் தான்; மேலும், நானே உங்களுடைய இறைவனாக
இருக்கின்றேன்; எனவே நீங்கள் எனக்கே அஞ்சுங்கள்” (என்றும் கூறினோம்). - குர்ஆன் 23:52.
"உங்களை விட்டுத் தவறிப்போன ஒன்றின் மீது நீங்கள் துக்கப்படாமல்இருக்கவும், அவன் உங்களுக்கு அளித்தவற்றின் மீது நீங்கள் (அதிகம்)மகிழாதிருக்கவும் (இதனை
உங்களுக்கு அல்லாஹ் அறிவிக்கிறான்); கர்வமுடையவர்கள்,
தற்பெருமை உடையவர்கள் எவரையும் அல்லாஹ்
நேசிப்பதில்லை."-குர்ஆன் 57:23.
"எனவே நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள்; கவலையும் கொள்ளாதீர்கள்; நீங்கள் முஃமின்களாக இருந்தால் நீங்கள் தாம் உன்னதமானவர்களாக
இருப்பீர்கள்." - குர்ஆன் 3:139.
"நிச்சயமாக எவர்கள் நம்பிக்கைக் கொண்டு நற்கருமங்கள் செய்து இன்னும்தங்கள் இறைவனுக்கு
முற்றிலும் அடிபணிகின்றார்களோ அவர்களேசுவனபதிக்குரியவர்கள்; அங்கு அவர்கள்
என்றென்றும் நிலைத்திருப்பார்கள்." - குர்ஆன் 11:23.
“நீங்கள் எங்கிருந்தபோதிலும்
உங்களை மரணம்அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக்
கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்தபோதிலும் சரியே!” - குர்ஆன்4:78
"அவர்கள் யாவரும் உம்முடைய இறைவனின் சமூகத்தில் வரிசையாகக் கொண்டுவரப்படுவார்கள்; “நாம் உங்களை முதல் தடவை படைத்தவாறே திட்டமாக இப்பொழுதும்நீங்கள் நம்மிடம் வந்து
விட்டீர்கள், ஆனால் நாம் உங்களுக்காகவாக்களிக்கப்பட்ட இத்தகைய
நாளை ஏற்படுத்த மாட்டோம் என்று நீங்கள் எண்ணிக்கொண்டிருந்தீர்கள்” (என்று சொல்லப்படும்)." - குர்ஆன் 18:48.
"இந்தக் குர்ஆன் அல்லாஹ்வினால் (அருளப்பட்டதே) அன்றி (மற்ற எவராலும்)
பொய்யாகக் கற்பனை செய்யப்பட்டதன்று. தவிர, இது இதற்கு முன்னுள்ள
வேதங்களை உண்மையாக்கி வைத்து அவைகளில் உள்ளவற்றை விவரித்துக் கூறுவதாகவும்
இருக்கிறது. ஆகவே, (இது) உலகத்தார் அனைவரையும்
படைத்து வளர்ப்பவனிடமிருந்து வந்தது என்பதில் அறவே சந்தேகமில்லை." - குர்ஆன் 10:37.
"அல்லாஹ்விடமே பொறுப்பை ஒப்படையுங்கள். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ்
(தன்னிடம்) பொறுப்பு சாட்டுபவர்களை நேசிக்கின்றான்." - குர்ஆன் 3:159
"நீங்கள்அவன் பக்கமே திரும்பியவர்களாக
இருங்கள்; அவனிடம் பயபக்தியுடன் நடந்துகொள்ளுங்கள்; தொழுகையையும் நிலை நிறுத்துங்கள்; இன்னும்
இணைவைப்போரில்நீங்களும் ஆகி
விடாதீர்கள்." -குர்ஆன் 30:31.
எவர்கள்நம் வசனங்களை பொய்ப்பித்து
இன்னும் (அவற்றைப் புறக்கணித்து)பெருமையடித்தார்களோ நிச்சயமாக அவர்களுக்கு வானத்தின் (அருள்) வாயில்கள்திறக்கப்பட மாட்டா - மேலும்
ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரையில்அவர்கள் சுவனபதியில் நுழைய மாட்டார்கள் - இவ்வாறே குற்றம்
செய்பவர்களுக்குகூலி கொடுப்போம். -குர்ஆன் 7:40
"அல்லாஹ்வின்பாதையில் தங்கள்
செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது: ஒவ்வொருகதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒருவித்தைப் போன்றது; அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்)இரட்டிப்பாக்குகின்றான்; இன்னும் அல்லாஹ்
விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும்
நன்கறிபவன்." -குர்ஆன் 2:261.
"காகிதத்தில் (எழுதப்பட்ட) ஒரு வேதத்தையே
நாம் உம் மீது இறக்கி வைத்து, அதனை அவர்கள்தம் கைகளால் தொட்டுப்
பார்த்தபோதிலும், “இது பகிரங்கமான
சூனியத்தைத்தவிரவேறில்லை“ என்று அந்நிராகரிப்போர் நிச்சயமாக சொல்வார்கள்." -குர்ஆன் 6:7.
இந்தகுர்ஆன் அல்லாஹ்
அல்லாத வேறு யாராலும் கற்பனை செய்யப்பட்டதன்று; (அல்லாஹ்வே அதை அருளினான்.) அன்றியும், அது முன்னால் அருளப்பட்ட வேதங்களைமெய்ப்பித்து அவற்றிலுள்ளவற்றை விவரிப்பதாகவும் இருக்கிறது. (ஆகவே) இதுஅகிலங்களுக்கெல்லாம்
(இறைவனாகிய) ரப்பிடமிருந்து வந்தது என்பதில்சந்தேகமேயில்லை. -குர்ஆன் 10:37.
"நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள்; நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், (வேறு கேடுகளின் பக்கம்
இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது." -குர்ஆன் 17:32.
(வான், பூமி ஆகிய) இவற்றில் அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்கள்இருந்திருந்தால், நிச்சயமாக இவையிரண்டும் அழிந்தே போயிருக்கும், அர்ஷுடையஇறைவனாம் அல்லாஹ்,
அவர்கள் வர்ணிக்கும் (இத்தகைய) தன்மைகளிலிருந்து
மிகவும்தூய்மையானவன்.-குர்ஆன் 21:22.
இன்னும், இறைவன் கூறுகின்றான்; இரண்டு தெய்வங்களை
ஏற்படுத்திக்கொள்ளாதீர்கள்; நிச்சயமாக
(வணக்கத்திற்குரிய) அவன் ஒரே நாயன்தான்! என்னையே நீங்கள் அஞ்சுங்கள்.-குர்ஆன் 16:51.
"அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வானானால், உங்களை வெல்பவர் எவரும் இல்லை; அவன் உங்களைக் கைவிட்டு விட்டால், அதன் பிறகு
உங்களுக்கு உதவி செய்வோர் யார் இருக்கிறார்கள்?" -குர்ஆன் 3:160
இன்னும் எவர்
மறுமையை நம்பவில்லையோ, நிச்சயமாக அவர் அந்த (நேர்)
வழியை விட்டு விலகியவர் ஆவார்.-குர்ஆன் 23:74.
மனிதர்கள்எச்சரிக்கப்பட்டு வணக்கத்திற்குரியவன் ஒரே இறைவன்தான் என்று அவர்கள்உறுதியாக அறிந்துகொள்வதற்கும், அறிவுடையவர்கள்
நல்லுணர்ச்சிபெறுவதற்கும் (குர்ஆனாகிய) இது (அல்லாஹ்வின்
கட்டளைகள் பொதிந்த) ஓர்அறிக்கையாகும்.-குர்ஆன் 14:52.
"நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம்
பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின்பெண்களுக்கும், அவர்கள் தங்கள்
தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறுகூறுவீராக; அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினைசெய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிகமன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்." -குர்ஆன் 33:59
"(பயபக்தியுடையோர்எத்தகையோர் என்றால்,) அவர்கள் இன்பமான
(செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்; தவிர கோபத்தைஅடக்கி கொள்வார்கள்; மனிதர்(கள் செய்யும்
பிழை)களை மன்னிப்போராய்இருப்பார்கள்; (இவ்வாறு அழகாக) நன்மை
செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான்." -குர்ஆன் 3:134.
"மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை கவனிக்கட்டும். குதித்து வெளிப்படும் (ஒரு துளி) நீரினால் படைக்கப்பட்டான்." -குர்ஆன் 86:5-6.
"திடமாக, நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம்." -குர்ஆன் 95:4.
"ஒவ்வோர்ஆத்மாவும் மரணத்தைச்
சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித்
தீர்ப்புநாளில் தான்,
உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக்கொடுக்கப்படும்." -குர்ஆன் 3:185.
"நம்பிக்கையாளர்களே! உங்களுடையதல்லாத வீடுகளில் நீங்கள் (நுழையக் கருதினால்,) அதில்இருப்பவர்களுக்கு
ஸலாம் கூறி (அவர்களுடைய) அனுமதியைப் பெறும் வரையில்நுழையாதீர்கள். இவ்வாறு நடந்துகொள்வது உங்களுக்கே மிக்க நன்று. (இதனைமறந்து விடாது) நீங்கள்
கவனத்தில் வைப்பீர்களாக!" -குர்ஆன் 24:27.
“என்னுடைய சமூகத்தாரே! இவ்வுலக வாழ்க்கை யெல்லாம் அற்ப சுகம்தான்; அன்றியும் நிச்சயமாக, மறுமையோ - அதுதான் (என்றென்றுமிருக்கும்) நிலையான வீடு. - குர்ஆன் 40:39
(மனிதர்களே!)அந்நாளில் நீங்கள்
(உங்கள் இறைவன் முன்) கொண்டு போகப்படுவீர்கள். மறைவானஉங்களுடைய எந்த
விஷயமும் அவனுக்கு மறைந்துவிடாது. - குர்ஆன் 69:18
"உங்களின்தண்ணீர் பூமியினுள்
(உறிஞ்சப்பட்டுப்) போய்விட்டால், அப்பொழுது ஓடும்
நீரைஉங்களுக்குக் கொண்டு
வருபவன் யார்? என்பதை கவனித்தீர்களா?" - குர்ஆன் 67:30
"அவ்வாறல்ல! (மரண வேளையில் அவன் உயிர்) தொண்டைக்குழியை அடைந்து விட்டால்,- “மந்திரிப்பவன் யார்?”
எனக் கேட்கப்படுகிறது. ஆனால், அவனோ நிச்சயமாக அதுதான் தன்
பிரிவு (காலம்) என்பதை உறுதி கொள்கிறான். இன்னும் கெண்டைக்கால் கெண்டைக்காலுடன் பின்னிக் கொள்ளும். உம் இறைவன் பால் அந்நாளில் தான் இழுத்துச் செல்லப்படுதல் இருக்கிறது. ஆனால் (அம்மனிதனோ சன்மார்க்கத்தின் மீது) உறுதிகொள்ளவுமில்லை; அவன் தொழவுமில்லை." -குர்ஆன் 75:26-31
"அல்லாஹ்வின்பாதையில் தங்கள்
செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது: ஒவ்வொருகதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒருவித்தைப் போன்றது; அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்)இரட்டிப்பாக்குகின்றான்; இன்னும் அல்லாஹ்
விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும்
நன்கறிபவன்." -குர்ஆன் 2:261.
நாம்மனிதனுக்கு தன் பெற்றோர்
(இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றிவஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம்கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடிமறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன; ஆகவே “நீ எனக்கும் உன்பெற்றோர்க்கும் நன்றி
செலுத்துவாயாக; என்னிடமே உன்னுடைய மீளுதல்இருக்கிறது.” -குர்ஆன் 31:14
"அவனே, இரண்டு கடல்களையும்
ஒன்றோடொன்று சந்திக்கச் செய்தான். (ஆயினும்) அவற்றிடையே ஒரு
தடுப்பும் இருக்கிறது; அதை அவை மீறமாட்டா." -குர்ஆன் 55:19-20
என் அடியார்களுக்கு
அவர்கள் அழகியதையே சொல்ல வேண்டும் என்று கூறுவீராக!-குர்ஆன் 17:53.
"(தவறுகளுக்காக) நீர் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரும், நிச்சயமாக அல்லாஹ்மன்னிப்பவனாகவும் மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்."-குர்ஆன் 4:106.
நம்பிக்கையாளர்களே! நிச்சயமாக! மதுவும், சூதாட்டமும், சிலை வணக்கமும், அம்பெறிந்து குறி கேட்பதும் ஷைத்தானுடைய அருவருக்கத்தக்க வேலைகளில்உள்ளவையாகும். ஆகவே, இவைகளிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். (அதனால்)நீங்கள் வெற்றியடைவீர்கள். - குர்ஆன் 5:90.
"உங்களில் எவர்கள் இறைநம்பிக்கை கொண்டிருக்கின்றீர்களோ, மேலும், எவர்கள் கல்வி ஞானம்
வழங்கப்பட்டிருக்கின்றார்களோ அவர்களுக்கு அல்லாஹ் உயர்ந்த பதவிகளை
வழங்குவான். மேலும், நீங்கள் செய்பவை அனைத்தையும்
அல்லாஹ் அறியக்கூடியவனாக இருக்கின்றான்." -குர்ஆன் 58:11
"நாம் மனிதனை கலக்கப்பட்ட ஓர் இந்திரியத் துளியிலிருந்து படைத்தோம்;
நாம்அவனைச் சோதிக்க வேண்டும் என்பதற்காக! மேலும், இந் நோக்கத்திற்காக நாம்அவனைச் செவியுறுபவனாகவும், பார்ப்பவனாகவும்
ஆக்கினோம்." - குர்ஆன் 76:2.
"உங்கள் பொருள்களும் உங்கள் மக்களும் (உங்களுக்கு) சோதனை தான். ஆனால் அல்லாஹ் - அவனிடம் தான் மகத்தான நற்கூலி இருக்கிறது." -குர்ஆன் 64:15
"அன்றியும், நிச்சயமாக அவனே சிரிக்க
வைக்கிறான்; அழச் செய்கிறான். இன்னும் நிச்சயமாக அவனே மரிக்கச் செய்கிறான்; இன்னும் உயிர்ப்பிக்கிறான்." -குர்ஆன் 53:43-44
"ஒன்றையுமே நீங்கள் அறியாதவர்களாக இருந்த நிலைமையில், உங்களது தாய்மார்களின் வயிற்றிலிருந்து அல்லாஹ்தான் உங்களை
வெளிப்படுத்தினான். அன்றி, உங்களுக்குச் செவிகளையும்,
கண்களையும், அறிவையும்
கொடுத்தவனும் அவன்தான். இதற்கு நீங்கள் (அவனுக்கு) நன்றி செலுத்துவீர்களாக!" -குர்ஆன் 16:78
"ஆகவே, எவர் ஓர் அணுவளவு நன்மை
செய்திருந்தாரோ அவர், (அங்கு) அதனையும்
கண்டுகொள்வார்." -குர்ஆன் 99:7
"அன்றி, "எவன் நம்பிக்கை கொண்டு (நாம்
கூறுகிறபடி) நற்செயல்கள் செய்கிறானோஅவனுக்கு (இறைவனிடத்திலும்) அழகான நற்கூலி இருக்கிறது. நாமும் நம்முடையவேலைகளில் சுலபமான வேலைகளையே
(செய்யும்படி) அவனுக்குக் கூறுவோம்." -குர்ஆன் 18:88
"அல்லாஹ் அல்லாதவற்றை(த் தங்களுக்குப்) பாதுகாவலர்களாக எடுத்துக்கொள்பவர்களுக்கு உதாரணம்
சிலந்திப் பூச்சியின் உதாரணம் போன்றது; அது (தனக்காக) ஒரு வீட்டைக்
கட்டியது; ஆனால் நிச்சயமாக
வீடுகளிலெல்லாம் மிகவும்பலஹீனமானது சிலந்திப்பூச்சியின் வீடேயாகும் - இதை அவர்கள் அறிந்துகொண்டிருப்பார்களாயின்
(தாங்கள் இணையாக எடுத்துக் கொண்டவற்றின் பலஹீனத்தைஅறிவார்கள்)." - குர்ஆன் 29:41.
உங்களது இறைவன் தன்னைத் தவிர
(மற்றெவரையும்) வணங்கக்கூடாதென்று (கட்டளையிட்டி ருப்பதுடன்) தாய் தந்தைக்கு நன்றி
செய்யும்படியாகவும் கட்டளையிட்டிருக்கிறான். உங்களிடம்
இருக்கும் அவர்களில் ஒருவரோ அல்லது இருவருமோமுதுமையை அடைந்து
விட்டபோதிலும் அவர்களை வெருட்டவும் வேண்டாம்; அவர்களை (நிந்தனையாகச்)
"சீ" என்றும் சொல்ல வேண்டாம். அவர்களிடம் (எதைக்கூறியபோதிலும்) மிக்க மரியாதையாக(வும் அன்பாகவுமே) பேசுங்கள். அவர்களுக்கு
மிக்க அன்புடன் பணிந்து நடங்கள்! – குர்ஆன்17:23-24
"நம்பி உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை அவற்றின்
சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்புவித்து விடவேண்டுமென்றும், மனிதர்களிடையே தீர்ப்பு கூறினால் நியாயமாகவே தீர்ப்புக் கூறுதல் வேண்டும்
என்றும், உங்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் கட்டளையிடுகிறான்;. நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு (இதில்) மிகவும் சிறந்த உபதேசம் செய்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான்." - குர்ஆன் 4:58
“இறைநம்பிக்கையாளர்களே!ஒரு சமூகத்தார் பிறியதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். அவர்கள்
(அல்லாஹ்விடத்தில் பரிகாசம் செய்யும்) இவர்களைவிட மேலான
வர்களாகஇருக்கலாம். அவ்வாறே
எந்தப் பெண்களும் மற்ற எந்தப் பெண்களையும் (பரிகாசம்செய்யவேண்டாம்.) அவர்கள் (பரிகாசம் செய்யும்) இவர்களைவிட மேலானவர்களாகஇருக்கலாம். உங்களில் ஒருவர்
ஒருவரை இழிவாகக் கருதி குறை கூறவேண்டாம்.உங்களில் ஒருவர் மற்றவருக்கு(த் தீய) பட்டப்பெயர் சூட்ட
வேண்டாம். நம்பிக்கை கொண்டதன் பின்னர், (அவ்வாறு தீய) பட்டப்பெயர் சூட்டுவது மகா கெட்ட (பாவமான)தாகும். எவர்கள் (இவைகளிலிருந்து)விலகிக் கொள்ளவில்லையோ
அவர்கள்தான் (வரம்பு மீறிய) அநியாயக் காரர்கள்.”-குர்ஆன் 49:11
"...கல்வி அறிவுடைய ஒவ்வொருவருக்கும்
மேலான அறிந்த ஒருவன் இருக்கவே செய்கிறான்!"
No comments:
Post a Comment