“அவதூற்றை, நீங்கள் திட்டமாக அறியாத
விஷயத்தை உங்கள் நாவுகளால் எடுத்துக் கொண்டு, நீங்கள் உங்கள் வாயால் கூறிக்கொண்டு திரிகிறீர்கள். இதனை நீங்கள் இலேசாகவும் மதித்துவிட்டீர்கள். ஆனால், இதுவோ அல்லாஹ்விடத்தில் (பாவங்களில்) மிக்க மகத்தானது.”– குர்ஆன் 24:15
“மனிதர்களே! ஓர்உதாரணம்
சொல்லப்படுகிறது. எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாகஅல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று
சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூடப் படைக்க முடியாது; இன்னும், அவர்களிடமிருந்து
ஒரு பொருளை எடுத்துக் கொண்டு போனால் அவர்களால்அதனை அந்த
ஈயிடத்திலிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது; தேடுவோனும், தேடப்படுவோனும்
பலஹீனர்களே.”– குர்ஆன் 22:73.
“நிச்சயமாக உங்கள்செல்வமும், உங்கள் குழந்தைகளும்
(உங்களுக்குச்) சோதனையாக இருக்கின்றன; நிச்சயமாக அல்லாஹ்விடத்தில்
தான் மிகவும் உயர்ந்த நற்கூலி உண்டு” என்பதைநீங்கள் நன்கு
அறிந்து கொள்ளுங்கள்.– குர்ஆன் 8:28.
“இறைவன் ஒருவனே! அவன்
தேவையற்றவன்! அவன் பெறவுமில்லை! பெறப்படவும் இல்லை! அவனுக்கு இணையாக எவரும் இல்லை!”– குர்ஆன் 112:1-4.
“நிச்சயமாக எவன்
ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும்குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் (அநியாயமாகக்) கொலைசெய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ
வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப்போலாவார்” – குர்ஆன்3:52
நீங்கள் வறுமைக்குப்
பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்; அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்)அளிக்கின்றோம் - அவர்களைக்
கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும்.– குர்ஆன்17:31.
"அன்றியும், இழிவானவனான அதிகம் சத்தியம்
செய்யும் ஒவ்வொருவனுக்கும் நீர் வழிபடாதீர்; (அத்தகையவன்) குறைகூறித்திரிபவன், கோள் சொல்லிக்
கொண்டு நடப்பவன். (எப்பொழுதும்)
நன்மையானவற்றைத் தடுத்துக் கொண்டிருப்பவன்; வரம்பு மீறியபெரும் பாவி." -குர்ஆன் 68:10-12
"இடிகளும் மற்ற மலக்குகளும் அவனுக்குப் பயந்து அவனைத் துதி செய்துபுகழ்கின்றனர். அவனே இடிகளை
விழச் செய்து, அதைக்கொண்டு அவன்
நாடியவர்களைத்தாக்குகிறான்.
(இவ்வாறெல்லாமிருந்தும்) அவர்கள் அல்லாஹ்வை பற்றி (உங்களிடம்) தர்க்கிக்கின்றனர். அவனோ (அவர்களைத் தண்டிக்கக் கருதினால்அவர்கள்) நழுவாது மிக்க
பலமாகப் பிடித்துக் கொள்பவன்." -குர்ஆன் 13:13.
"எவர்கள் தங்கள் அறியாமையினால் பாவத்தைச் செய்து (அதனை பாவமென அறிந்து)பின்னர் வருத்தப்பட்டு
அதிசீக்கிரத்தில் (அதிலிருந்து) நீங்கிவிடுகின்றார்களோ அத்தகையவர்களை மன்னிப்பதுதான் அல்லாஹ்வின் மீதுகடமையாகும். ஆகவே, அல்லாஹ் அவர்களை மன்னித்து விடுகின்றான். அல்லாஹ்நன்கறிந்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்." -குர்ஆன் 4:17.
"மனிதன் தன்னுடைய தாய் தந்தைக்கு நன்றி செலுத்தும்படி நாம் அவனுக்குநல்லுபதேசம் செய்தோம்.
அவனுடைய தாய், கஷ்டத்துடனேயே அவனை
(கர்ப்பத்தில்)சுமந்திருந்து கஷ்டத்துடனேயே
பிரசவிக்கின்றாள். அவள் கர்ப்பமானதிலிருந்து, இவன் பால்குடி மறக்கும் வரையில், முப்பது மாதங்கள்
(மிக்க கஷ்டத்துடன்)செல்கின்றன." -குர்ஆன் 46:15.
எதைப்பற்றி
உமக்கு(த் தீர்க்க) ஞானமில்லையோ அதை(ச் செய்யத்) தொடரவேண்டாம்; நிச்சயமாக (மறுமையில்) செவிப்புலனும், பார்வையும், இருதயமும் இவை ஒவ்வொன்றுமே
(அதனதன் செயல் பற்றி) கேள்வி கேட்கப்படும். -குர்ஆன் 17:36.
"அன்றியும் (பூமியிலுள்ள) எத்தனையோ பிராணிகள் தங்கள் உணவைச் சுமந்து
கொண்டு திரிவதில்லை; அவற்றுக்கும் உங்களுக்கும் அல்லாஹ் தான் உணவளிக்கின்றான்." -குர்ஆன்
29:60.
அவனே உங்களை ஒரே
உயிரிலிருந்து படைத்தான். பின்னர் அவனே அந்தஉயிரிலிருந்து அதன் துணையை உண்டாக்கினான். அவனே உங்களுக்காக எட்டுகால்நடைகளை இணைகளாகப்
படைத்தான். அவன் உங்கள் அன்னையரின் வயிற்றில், மூன்றுஇருட்திரைகளினுள்
ஒன்றன் பின் ஒன்றாக உங்களுக்கு வடிவம் கொடுத்துக்கொண்டிருக்கின்றான். (இந்தக் காரியங்கள் செய்கின்ற) அந்த அல்லாஹ்தான்உங்கள் இறைவனாவான்.
ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது. வணக்கத்திற்குரியஇறைவன் அவனைத் தவிர வேறு யாரும் இல்லை. பிறகு, நீங்கள் எங்கிருந்து திசைதிருப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள்? -குர்ஆன் 39:6.
இறைநம்பிக்கை
கொண்டவர்களே! நீங்கள் ‘ருகூவும்’ ஸுஜூதும்* செய்யுங்கள்.உங்கள் இறைவனுக்கு அடிபணியுங்கள். மேலும், நற்பணி ஆற்றுங்கள். (இதன் மூலமே)நீங்கள் வெற்றி அடையக்கூடும்! -குர்ஆன் 22:77.
"...நீங்கள்
(இறைவனுக்கு) நன்றி செலுத்துவீர்களாயின், உங்களைப் பற்றி அவன் திருப்தியடைவான்..." - குர்ஆன் 39:7
"உங்களுக்கு (ஸலாம் எனும்) வாழ்த்துக்
கூறப்பட்டால் நீங்கள் அதைவிட அழகிய முறையில்அல்லது (குறைந்தபட்சம்) அதைப் போன்றாவது பதில் வாழ்த்துக் கூறுங்கள்! திண்ணமாக அல்லாஹ் ஒவ்வொரு செயலுக்கும் கணக்கு வாங்குபவனாய்
இருக்கின்றான்." - குர்ஆன் 4:86
மனிதர்களே!
நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே
படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர்
அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக்கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர்
மிகவும்பயபக்தியுடையவராக
இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில்,
நிச்சயமாகமிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து)தெரிந்தவன்.- குர்ஆன் 49:13.
"கிழக்கு திசையும் மேற்கு திசையும் அல்லாஹ்வுக்கே (உரியன). ஆதலால் நீங்கள் எத்திசையை நோக்கினும் அது அல்லாஹ்வின் திசையே! நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன்; மிக
அறிந்தவன்."-குர்ஆன் 2:115.
"இன்னும், உணவளிக்க அல்லாஹ்
பொறுப்பேற்றுக் கொள்ளாத எந்த உயிரினமும்பூமியில் இல்லை; மேலும் அவை வாழும்
இடத்தையும் (இருக்கும்) இடத்தையும், அவை (மடிந்து) அடங்கும் இடத்தையும் அவன் அறிகிறான். இவையனைத்தும் (லவ்ஹுல்மஹ்ஃபூல் என்னும்) தெளிவான
புத்தகத்தில் (பதிவாகி) இருக்கின்றன." –குர்ஆன் 11:6.
“மாஷா அல்லாஹு; லா குவ்வத்த இல்லா
பில்லாஹ்” - அல்லாஹ் நாடியதே நடக்கும்; அனைத்து சக்தியும் அல்லாஹ்வுக்கேயன்றி வேறில்லை –குர்ஆன் 18:39
“அல்லாஹ்வே!
ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்குஆட்சியைக் கொடுக்கின்றாய்; இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்துஅகற்றியும் விடுகிறாய்; நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்; நீ நாடியவரைஇழிவு படுத்தவும் செய்கிறாய்; நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன அனைத்துப்பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய்.” –குர்ஆன் 3:26
நிச்சயமாக நரகம்
எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது. “வரம்பு மீறியவர்களுக்கு”
தங்குமிடமாக. அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில். அவர்கள் அதில் குளிர்ச்சியையோ, குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள். கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர. இது (அவர்கள் செயலுக்குத்) தகுமான கூலியாகும். -குர்ஆன் 78:21-26.
யார் வட்டி (வாங்கித்)
தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்டஒருவன் பைத்தியம்
பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய் எழமாட்டார்கள். -குர்ஆன் 2:275.
"உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்" -குர்ஆன் 2:195
"எவன் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான்" -குர்ஆன் 99:8
"உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து, தான தர்மம் செய்து கொள்ளுங்கள்; (அவ்வாறு செய்யாதது
மரணிக்கும் சமயம்); “என் இறைவனே! என் தவணையை எனக்கு சிறிது பிற்படுத்தக் கூடாதா? அப்படியாயின் நானும் தானதர்மம் செய்து ஸாலிஹான (நல்ல)வர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே” என்றுகூறுவான்." - குர்ஆன் 63:10.
“எனக்கு அல்லாஹ்வே
போதுமானவன். (வழிபடுவதற்குரிய) நாயன் அவனையன்றி (வேறுயாரும்) இல்லை; அவன் மீதே நான்
பரிபூரண நம்பிக்கை கொண்டுள்ளேன் - அவன்தான் மகத்தான
அரியாசனத்தின் (அர்ஷின்) அதிபதி” - குர்ஆன்9:129
“நாங்கள் அல்லாஹ்வையே பூரணமாக
நம்பி (அவனிடமே எங்கள் காரியங்களைஒப்படைத்து)க்
கொண்டோம் (என்று கூறி) எங்கள் இறைவனே! அநியாயம் செய்யும்மக்களின் சோதனைக்கு எங்களை ஆளாக்கிவிடாதே!” – குர்ஆன் 10:85
மேலும் அவர்கள்
இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப்
போடப்பட்டு விட்டனவா? -குர்ஆன் 47:24.
"வானங்களையும்பூமியையும் படைத்தவனே! இம்மையிலும் மறுமையிலும் நீயே என் பாதுகாவலன்;
முஸ்லிமாக (உனக்கு முற்றிலும் வழிபட்டவனாக இருக்கும்
நிலையில்) என்னை நீகைப்பறறிக் கொள்வாயாக! இன்னும் நல்லடியார் கூட்டத்தில் என்னைச்சேர்த்திடுவாயாக!” -குர்ஆன் 12:101
“என் இறைவனே! சிறுவயதில் எவ்வாறு என்னை இவர்கள் (என் பெற்றோர்கள்) கருணையுடனும் பாசத்துடனும் வளர்த்தார்களோ
அவ்வாறு இவர்கள்(என் பெற்றோர்கள்)மீது நீ கருணை புரிவாயாக!” -குர்ஆன் 17:24
"நிச்சயமாக நற்செயல்கள், தீச்செயல்களைப்
போக்கிவிடும். (இறைவனை) நினைவு கூறுவோருக்கு
இது நல்லுபதேசமாக இருக்கும்." - குர்ஆன் 11:114
"நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம்; ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்; ஒரு பொருளை நீங்கள் விரும்பலாம், ஆனால் அது உங்களுக்குத் தீமை பயப்பதாக இருக்கும். (இவற்றையெல்லாம்)
இறைவன் அறிவான், நீங்கள் அறியமாட்டீர்கள்." - குர்ஆன் 2:216
செல்வத்தைப
பெருக்கும் ஆசை உங்களை (இறைவனை விட்டும்) பராக்காக்கி விட்டது- நீங்கள் மண்ணறைகளைச் சந்திக்கும் வரை. -குர்ஆன் 102:1-2.
இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க
வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாதபிறரிடமிருந்து
வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள்கண்டிருப்பார்கள். -குர்ஆன் 4:82.
நிச்சயமாக குறிப்பிட்ட
நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது முஃமின்களுக்கு விதியாக்கப் பெற்றுள்ளது. - குர்ஆன்4:103.
ஆணாயினும், பெண்ணாயினும்
முஃமினாக இருந்து யார் (சன்மார்க்கத்திற்கு இணக்கமான) நற்செயல்களைச் செய்தாலும், நிச்சயமாக நாம் அவர்களை (இவ்வுலகில்) மணமிக்க தூயவாழ்க்கையில் வாழச் செய்வோம்; இன்னும் (மறுமையில்) அவர்களுக்கு அவர்கள்செய்து கொண்டிருந்தவற்றிலிருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம்கொடுப்போம்.- குர்ஆன்16:97.
திட்டமாகமனிதன் மீது காலத்தில் ஒரு
நேரம் வந்து, அதில் அவன் இன்ன பொருள்
என்றுகுறிப்பிட்டுக்
கூறுவதற்கில்லாத நிலையில் இருக்கவில்லையா? -குர்ஆன் 76:1
நிச்சயமாக
(மறுமையில்) செவிப்புலனும், பார்வையும், இருதயமும் இவை ஒவ்வொன்றுமே (அதனதன் செயல் பற்றி) கேள்வி கேட்கப்படும். -குர்ஆன் 17:36
“ஜகாத்என்னும் தானங்கள்
தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல்செய்யும்
ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள்
உள்ளங்கள்ஈர்க்கப்படுவதற்காகவும்,
அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன்பட்டிருப்பவர்களுக்கும்,
அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்),
வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ்
விதித்த கடமையாகும் - அல்லாஹ்
(யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன்.” – குர்ஆன்9:60
நிச்சயமாக அல்லாஹ்
நீதி செலுத்துமாறும், நன்மை செய்யுமாறும், உறவினர்களுக்கு கொடுப்பதையும் கொண்டு (உங்களை) ஏவுகிறான்; -குர்ஆன் 16:90
இறைநம்பிக்கையாளர்களே,
எந்த ஆண்களும் மற்றெந்த ஆண்களையும் பரிகாசம் செய்ய வேண்டாம். ஒருவேளைஅவர்கள் இவர்களைவிடச்
சிறந்தவர்களாயிருக்கலாம். எந்தப் பெண்களும்மற்றெந்தப் பெண்களையும் பரிகாசம் செய்ய வேண்டாம். ஒருவேளை அவர்கள்இவர்களைவிடச்
சிறந்தவர்களாயிருக்கலாம். நீங்கள் ஒருவரையொருவர் குத்திப்பேசாதீர்கள்.
ஒருவருக்கொருவர் மோசமான பட்டப் பெயர்களைச் சூட்டிஅழைக்காதீர்கள். இறைநம்பிக்கை கொண்டதன் பின்னர் மோசமான பெயர்களைச்சூட்டுவது மிகவும் கெட்ட
விஷயமாகும். எவர்கள் இந்த நடத்தையைக்கைவிடவில்லையோ அவர்கள்தாம் கொடுமைக்காரர்கள். -குர்ஆன் 49:11
"உமக்கு மரணம் வரும்வரை உமது இறைவனை வணங்குவீராக!"-குர்ஆன் 15:99.
பெண்கள், ஆண் மக்கள்; பொன்னிலும், வெள்ளியிலுமான பெருங்குவியல்கள்; அடையாளமிடப்பட்ட (உயர்ந்த)
குதிரைகள்; (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகள், சாகுபடி நிலங்கள் ஆகியவற்றின் மீதுள்ள இச்சை மனிதர்களுக்குஅழகாக்கப்பட்டிருக்கிறது;
இவை(யெல்லாம் நிலையற்ற) உலக வாழ்வின்சுகப்பொருள்களாகும்; அல்லாஹ்விடத்திலோ அழகான தங்குமிடம் உண்டு.-குர்ஆன் 3:14.
"என் இறைவனே! என்னுடைய கல்வி ஞானத்தை மென்மேலும் அதிகப்படுத்து" குர்ஆன் 20:114
இறைவன் கூறுகிறான், "(ஆண், பெண் இருபாலாரில்) ஆண் பாலாரை(ப் பெண்பாலார் மீது) அல்லாஹ்மேன்மையாக்கி
வைத்திருப்பதுடன் (ஆண்பாலார்) தங்கள் பொருள்களை(ப் பெண்பாலாருக்கு)ச் செலவு செய்வதனாலும் ஆண்கள்தான்
பெண்களை நிர்வகிக்கக்கூடியவர்களாக இருக்கின்றனர். ஆகவே, நல்லொழுக்கமுள்ள பெண்கள்
(அல்லாஹ்வுக்கும் தங்கள் கணவனுக்கும்) பணிந்தே நடப்பார்கள். (தங்கள் கணவன்) மறைவாக உள்ள
சமயத்தில் அல்லாஹ்வின் பாதுகாப்பைக் கொண்டு (தங்களையும் கணவனின் மற்ற பொருள்களையும்) பேணிக்காத்துக் கொள்வார்கள். எவளும் கணவனுக்கு மாறு செய்வாளென்று நீங்கள் அஞ்சினால் அவளுக்கு
நல்லுபதேசம் செய்யுங்கள்." -குர்ஆன் 4:34
No comments:
Post a Comment