முக்கிய அறிவிப்பு:

இத்தளத்தில் இடம்பெறும் இஸ்லாமிய ஆக்கங்களை பதிவிறக்கம் செய்யலாம், பிறருக்கு Facebook,Twitter, Whatsapp,Telegram etc., எந்த தளத்திலும் பகிரலாம், பிறர் பயன்பெற எந்த வகையிலும் எவரும் பயன்படுத்திக் கொள்ளலாம், எம்மிடம் அனுமதி பெற வேண்டியதில்லை. எம் மூலம் நீங்கள் அறிந்த செய்தி, உங்களால் பிறருக்கு எத்தி வைக்கப்படும் போது உங்களுக்கும் நன்மை உண்டு, எமக்கும் நன்மை உண்டு, அல்லாஹ் போதுமானவன். குறிப்பு: இத்தளத்தில் எம்மை அறியாமல் பலவீனமான செய்திகளோ, மொழிபெயர்ப்புத் தவறுகளோ, வேறு பிழைகளோ இடம் பெற்றிருப்பின் சுட்டிக் காட்டவும், இன்ஷா அல்லாஹ் திருத்திக் கொள்ளப்படும்.

Friday, September 6, 2019

அல்லாஹ் பார்க்காத பேசாத நபர்கள்

அல்லாஹ் பார்க்காத பேசாத நபர்கள்


இந்த பூமியில் மனிதன் ஏராளமான குற்றங்களை செய்கிறான்அவன் தன்னால் முடிந்த அளவு இப்பாவங்களை விட்டு விலகி அல்லாஹ்வை பயந்து நல்லவனாக வாழ்வதற்காக அவனது பாவங்களுக்கு தண்டனைகளை தருவதாக அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான். நபி(ஸல்) அவர்களின் மூலமும் இதை நமக்கு தெரியப்படுத்தியுள்ளான்.
இந்த உலகத்தில் குறிப்பிட்ட சில குற்றங்களை செய்தவர்களை மறுமையில் அல்லாஹ் பார்க்கமாட்டான்.அவர்களும் அல்லாஹ்வை பார்க்கும் பாக்கியத்தை இழந்து விடுவார்கள்.இவ்வாறு பின்வரும் வசனம் கூறுகிறது
.
அவ்வாறில்லை! அந்நாளில் அவர்கள் தமது இறைவனை விட்டும் தடுக்கப் படுவார்கள்
(அல்குர்ஆன் 83 : 15
மறுமை நாளில் நல்லவர்கள் அனைவரும் அல்லாஹ்வை கண்கூடாக காண்பார்கள். பௌர்ணமி நிலவை நாம் எப்படி அனைவரும் கண்கூடாக பார்க்கிறோமோ அதுபோன்று அல்லாஹ்வை காண்போம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பாளர் : ஜரீர் இப்னு அப்துல்லாஹ்
நூல் : (புகாரி : 7435)
அல்லாஹ்வை பார்ப்பது என்பது சாதாரணமான ஓன்றல்லமிகப்பெரிய பாக்கியம்சொர்க்கவாசிகள் சுவர்கத்தில் நுழையும் போது இன்னும் உங்களுக்கு நான் எதையாவது அதிகப்படுத்த வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களாஎன்று அல்லாஹ் கேட்பான்.நீ எங்களை நரகத்திலிருந்து காப்பாற்றி சுவர்க்கத்தில் நுழையச்செய்யவில்லையாஎங்கள் முகங்களை நீ வெண்மையாக்கவில்லையாஎன்று சுவர்க்கவாசிகள் கூறுவார்கள். பிறகு அல்லாஹ் திரையை அகற்றுவான். அல்லாஹ்வை அவர்கள் காண்பதை விட அவர்களுக்கு விருப்பமானதாக எதுவும் இருக்காது,
அறிவிப்பாளர் : ஸþஹைப்
நூல் : (முஸ்லிம் : 266)
அல்லாஹ் பேசமாட்டான் என்பதை நல்லவார்த்தைகளால் அன்போடு பேசமாட்டான் என்று விளங்கிக்கொள்ள வேண்டும்.ஏனெனில் அல்லாஹ் நரகவாசியைப் பார்த்து வேதனையை சுவை என்று கூறுவதாக திருறைக் குர்ஆன் கூறுகிறது.
சுவைத்துப்பார்! நீ மிகைத்தவன்மரியாதைக்குரியவன். நீங்கள் சந்தேகம் கொண்டிருந்தது இதுவே (என்று அல்லாஹ் கூறுவான்.)
அல்குர்ஆன் ( 44 : 49 )
இன்னும் கேலிசெய்யும் விதமாக அல்லாஹ் நரகவாசியிடம் பேசுவதை குர்ஆன் பல இடங்களில் கூறுகிறது. மறுமை நாளில் பாவிகளை அல்லாஹ் விசாரிப்பான் என்று பல நபிமொழிகளும் கூறுகின்றன. அல்லாஹ் தூய்மைப்படுத்தமாட்டான் என்றால் பாவத்திலிருந்து தூய்மைப்படுத்தி குற்றமற்றவர்களாக ஆக்கமாட்டான் என்று விளங்கிக் கொள்ள வேண்டும்.
குர்ஆனிலும் நம்பத்தகுந்த நபிமொழியிலும் கிட்டத்தட்ட பத்து நபர்கள் இந்த தண்டனைக்கு உரியவர்களாக இருக்கிறார்கள். இன்னும் இரண்டு நபர்கள் இந்த தண்டனைக்கு உரியவர்கள் என்று பலகீனமான ஹதீஸ்கள் கூறுகின்றன. இந்த 12 நபர்கள் யார் யார் என்பதை வரிசையாக இனி பார்ப்போம்.
(1)    வேதத்தை மறைத்தவர்கள்
அற்பமான பணத்திற்காக அல்லாஹ்வின் வசனங்களை மக்களுக்கு மறைத்தவர்களை அல்லாஹ் பார்க்கமாட்டான். இன்னும் அவர்களிடம் பேசவும்மாட்டான். அவர்களைத் தூய்ûம்படுத்தவும்மாட்டான் என்று அல்லாஹ் கூறுகிறான்.
அல்லாஹ் அருளிய வேதத்தை மறைத்து அதை அற்ப விலைக்கு விற்போர்தமது வயிறுகளில் நெருப்பைத் தவிர (வேறு எதையும்) சாப்பிடுவதில்லை. கியாமத் நாளில் அல்லாஹ் அவர்களுடன் பேச மாட்டான். அவர்களைத் தூய்மைப் படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு.
அல்குர்ஆன் ( 2 : 174 )
 இன்று பெரும்பாலான மார்க்க அறிஞர்கள் இந்த தவற்றை செய்துவருகிறார்கள். குர்ஆனுக்கும் ஹதீஸþக்கும் மாற்றமான எத்தனையோ விஷயங்கள் அவர்களிடம் காணப்படுகின்றது. அவற்றையெல்லாம் மக்களிடம் கூறினால் தன்னுடைய பொருளாதாரத்திற்கு பாதிப்பு வந்துவிடும் என்று பயப்படுகிறார்கள்.
 உதாரணமாக இன்று சமுதாயத்தில் மவ்லூது பாத்திஹா கதம் போன்ற பித்அத்துகள் அனைத்தும் வருமானத்திற்காகத் தான் ஆலிம் பெருந்தகைகளால் உருவாக்கப்பட்டது. இவற்றை செயல்படுத்தும் படி அல்லாஹ்வோ அவனது தூதர் (ஸல்) அவர்களோ கூறவில்லை என்பது ஆலிம்களுக்கு நன்றாகத் தெரியும். நாம் இவற்றுக்கு எதிரான வசனங்களையும் ஹதீஸ்களையும் கூறினாலும் அவர்கள் ஏற்பதற்கு முன்வருவதில்லை. பல வியாக்கானங்களைக் கூறி அவர்கள் செய்வதையே சரி காண்கிறார்கள்.
 இவ்வாறு பணத்திற்காக வசனங்களை நாம் மறைத்தால் அல்லாஹ் நம்முடன் பேசாமல் இருப்பதோடு நாம் இவ்வழியில் சம்பாதித்தவற்றை நெருப்பாக மாற்றி உண்ண வைப்பான். கடுமையான இந்தத் தண்டனையை நமது மார்க்க அறிஞர்க்ள் எண்ணிப்பார்ப்பதில்லை.
இந்த உலகில் வேண்டுமானால் அதிகமாக சம்பாதித்துக் கொண்டு மகிழ்சியாக வாழலாம். ஆனால் மறுமையில் இதற்கான பதிலை நாம் கூறாமல் அல்லாஹ்விடமிருந்து தப்பிக்க முடியாது. நபிமார்களாக இருந்தாலும் அவர்களையும் அல்லாஹ் விசாரிக்காமல் விட்டுவிடமாட்டான்.
உமது இறைவன் மீது ஆணையாக! அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி அவர்கள் அனைவரையும் விசாரிப்போம்.
அல்குர்ஆன் (15 : 92)
யாருக்குத் தூதர்கள் அனுப்பப் பட்டார்களோ அவர்களையும் விசாரிப்போம். தூதர்களையும் விசாரிப்போம்.
அல்குர்ஆன் (7 : 6)
இதைத் தெளிவாக சஹாபாக்கள் விளங்கியிருந்தார்கள். அபூஹீரைரா (ரலி) அவர்கள் அதிகமாக ஹதீஸை அறிவிப்பதை சஹாபாக்கள் குறையாகக் கூறிக்கொண்டிருந்தார்கள். இதையெல்லாம் அபூஹீரைரா (ரலி) அவர்கள் ஓரு பொருட்டாக கருதாமல் தான் நபி (ஸல்) அவர்களிடம் கேட்ட செய்திகளை மக்களுக்கு கூறினார்கள். மார்க்கத்தை மறைக்கக் கூடாது என்று அவாகள் எண்ணியதே இதற்கு காரணம்.
மக்களுக்காக நாம் வேதத்தில் தெளிவுபடுத்திய பின்னர் நாம் அருளிய தெளிவான சான்றுகளையும்நேர் வழி யையும் மறைப்பவர்களை அல்லாஹ்வும் சபிக்கிறான். சபிப்ப(தற்குத் தகுதியுடைய) வர்களும் சபிக்கின்றனர்.
அல்குர்ஆன் (2 : 159)
இந்த வசனத்தை அபூஹீரைரா (ரலி) அவர்கள் சுட்டிகாட்டி இந்த வசனம் மட்டும் இல்லாவிட்டால் நான் ஓரு ஹதீஸைக் கூட கூறியிருக்கமாட்டேன் என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹீரைரா (ரலி)
நூல் : (புகாரி : 118)
நாம் சிறிய சிறிய விஷயங்களில் உறுதிமொழி வாங்கமாட்டோம். மிக முக்கியமான விஷயத்தில் தான் உறுதிமொழி வாங்குவோம். மார்க்கத்தை மறைப்பது மாபெரும் குற்றம் என்பதால் அக்குற்றத்தை செய்யக்கூடாது என்று நமக்கு முன் வேதம் வழங்கப்பட்டவர்களான யூத கிரிஸ்தவர்களிடத்தில் அல்லாஹ் உறுதிமொழி வாங்கினான். இந்த உறுதிமொழியை அவர்கள் நிறைவேற்றவில்லை. ஆதலால் தீமையை சம்பாதித்துக் கொண்டார்கள்.
வேதம் கொடுக்கப்பட்டோரிடம் அதை மக்களுக்குத் தெளிவு படுத்த வேண்டும்மறைக்கக் கூடாது'' என்று அல்லாஹ் உறுதி மொழி எடுத்த போதுஅவர்கள் அதைத் தமது முதுகுகளுக்குப் பின் எறிந்தனர் அற்பமான விலைக்கு விற்றனர். அவர்கள் விலைக்கு வாங்கியது மிகவும் கெட்டது
அல்குர்ஆன் (3 : 187)
நாம் இந்த உலகத்திற்கு வந்ததின் நோக்கம் மறுமையில் வெற்றியடைய வேண்டும் என்பதற்காகத் தான். நாம் தொழுவதும் நோன்பு வைப்பதும் அவ்வுலகில் பலனை அடைவதற்காகத் தான். ஆனால் நாம் மார்க்கத்தை மறைப்போமானால் மறுமையில் நமக்கு எந்த பலனும் கிடைக்காது. அல்லாஹ் வேதமுடையோர்களிடத்தில் செய்த இந்த உடன்படிக்கையை அவர்கள் நிறைவேற்றாத காரணத்தினால் அவர்களுக்கு எந்தப் பலனும் இல்லை என்று குர்ஆனில் கூறுகிறான்.
அல்லாஹ்விடம் செய்த உறுதி மொழியையும்தமது சத்தியங்களையும் அற்பமான விலைக்கு விற்றோருக்கு மறுமையில் எந்தப் பாக்கியமும் இல்லை. கியாமத் நாளில் அவர்களுடன் அல்லாஹ் பேசவும் மாட்டான். அவர்களைப் பார்க்கவும் மாட்டான். அவர்களைத் தூய்மைப் படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.
அல்குர்ஆன் (3 : 77)
(2)   பொய்சொல்லி வியாபாரம் செய்தவர்கள்
இன்று பொய் இல்லாமல் வியாபாரம் கிடையாது என்று கூறும் அளவுக்கு பொய் வியாபாரத்தில் கலந்துவிட்டது. உண்மையைக் கூறி நியாயமாக வியாபாரம் செய்பவன் பிழைக்கத் தெரியாதவன் என்றும் பொய்சொல்லி ஏமாற்றுபவன் அறிவாளி என்றும் நாம் எண்ணிக்கொண்டிருக்கிறோம்.
 நியாயமாக பிழைப்பவனுக்கு குறைவாக வருமானம் வந்தாலும் அதில் அல்லாஹ் நிறைவான் பரகத்தை வழங்குகிறான். அநியாயமாகப் பிழைப்பவனுக்கு நிறைவாக வருமானம் வந்தாலும் அதில் அல்லாஹ் பரகத்தை அளித்துவிடுகின்றான். இதை பின்வரும் ஹதீஸ் விளக்குகிறது.
விற்பவரும் வாங்குபவரும் பிரியும் வரை (வியாபாரத்தை முறித்துக் கொள்ளும்) உரிமைபடைத்திருக்கிறார்கள். அவ்விருவரும் உண்மையைக் கூறி (பொருளின் குறையைத்) தெளிவுபடுத்தினால் அவர்களின் வியாபாரத்தில் பரகத் செய்யப்படும். அவர்கள் பொய் கூறி (பொருளின் குறையை) மறைத்தால் அவர்களின் வியாபாரத்தில் பரகத் நீக்கப்படும்.
அறிவிப்பாளர் : ஹகீம் பின் ஹிஸாம் (ரலி)
நூல் :  (புகாரி : 2110)
வியாபாரிகள் அனைவரும் பொய்சொல்வார்கள் என்பதை மக்கள் தெளிவாக அறிந்து வைத்துள்ளார்கள்.வியாபாரி அசல் விலை 50 ரூபாய் என்று கூறினால் வாங்குபவர் 30 ரூபாய்க்குத் தாருங்கள் என்று கேட்கிறார். மக்கள் யாரும் அவர்கள் கூறுவது உண்மை என்று நம்பத்தயாராக இல்லை. அல்லாஹ் பார்க்காத பேசாத நபர்களில் இவ்வாறு பொய் கூறி வியாபாரம் செய்தவனும் ஓருவனாவான்.
மூன்று பேர்களுடன் அல்லாஹ் மறுமையில் பேசவும்மாட்டான். அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான். (ஓருவன் தன் பொருளை அதிக விளைக்கு) விற்பதற்காக வாடிக்கையாளர் கொடுக்கும் விளையை விட அதிக விளைகொடுத்து வாங்கியதாக (பொய்) சத்தியம் செய்தவன்.
அறிவிப்பாளர் : அபூஹீரைரா (ரலி)
நூல் : (புகாரி : 2369)
(3)   சுயநலத் தொண்டன்
ஓரு இயக்கத்திற்கோ அல்லது ஓரு குழுவிற்கோ நாம் ஓருவரை தலைவராக ஏற்றுக்கொள்வதாக இருந்தால் பொதுநலனை கருத்தில் கொண்டு ஏற்க வேண்டும். இயக்கத்திற்கு விசுவாசமாக நடக்கும் நாணயமானவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தனக்கு மட்டும் பலனளிக்கும் நபரை தேர்வு செய்யக் கூடாது. நியாயமானவர்களின் முடிவு அப்படி இருக்கும்.
ஆனால் இன்று பெரும்பாலான தொண்டர்கள் இதை கவனத்தில் வைப்பதில்லை. தன்னுடைய நலனுக்காக கொல்லைக்காரர்களையும் அயோக்கியர்களையும் தலைவராக ஏற்றுள்ளார்கள். தலைவன் அவர்களுக்கு வாரி வழங்கினால் அவனுக்கு விசுவாசமான தொண்டனாக இருக்கிறார்கள். தலைவன் அவர்குளுக்கு வழங்கவில்லையென்றால் அவனை பகைக்கிறார்கள்.
 இன்று நமது நாட்டில் ஏராளமான கட்சிகள் இருக்கின்றன. இந்தக் கட்சிகளில் இன்று ஓரு கட்சியில் தொண்டனாக இருப்பவர் நாளை வேறொரு கட்சியில் தொண்டனாக உள்ளார். நேற்றுவரை தன் தலைவனை போற்றி புகழ்ந்தவர்கள் இன்று திட்டிக்கொண்டிருக்கிறாôகள். தலைவர் நாணயமானவராக இருந்தாலும் தனக்குப் பிடிக்கவில்லை என்ற காரணத்தினால் வெறுக்கிறார்கள். எதிரியாக மாறி அவனைப் பற்றி குறை கூறிக்கொண்டே இருக்கிறார்கள். இது போன்ற சந்தர்ப்ப வாதிகளுக்கும் அல்லாஹ் இந்த தண்டனையை வழங்குவான்.
அவன் தன் தலைவனிடம் உலக ஆதாயத்திற்காகவே விசுவாசப் பிரமாணம் செய்து கொண்டவன். அவர் கொடுத்தால் திருப்தி அடைந்து கொடுக்காவிட்டால் கோபம் கொள்பவன்,
அறிவிப்பாளர் : அபூஹீரைரா (ரலி)
நூல் : (புகாரி : 2358)
தலைவர் மார்க்கத்திற்கு மாற்றமான காரியத்தை செய்யும் படி கூறினால் அவருக்கு கட்டுப்பட கூடாது. ஏனெனில் (அல்லாஹ்வுக்கு) மாறுசெய்வதில் கட்டுப்படுதல் இல்லை. கட்டுப்படுதல் என்பது நல்ல விஷயத்தில் தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பாளர் : அலீ (ரலீ)
நூல் : (புகாரி : 7257)
தலைவர் அநீதமாக நடந்தாலும் அவருக்கு எதிராக நாம் களம் இறங்கக்கூடாது.
நமது தேவையை  அல்லாஹ்விடம் கேட்க வேண்டும். கட்டுப்பாட்டிலிருந்து வெளியேறக்கூடாது. தலைவர் நம்மை விட அழகில் அந்தஸ்த்தில் தாழ்ந்தவராக இருந்தாலும் கட்டுப்பட வேண்டும்.
            விரைவில் உங்களை விட பிறருக்கு முன்னுரிமை வழங்கப்படும். இன்னும் நீங்கள் வெறுக்கின்ற சில காரியங்களும் நடக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதரே அப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் கட்டளையிடுகிறீர்கள் என்று மக்கள் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் உங்கள் மீதுள்ள கடமைகளை நிறைவேற்றுங்கள். உங்களுக்குரிய உரிமைகளை அல்லாஹ்விடம் கேளுங்கள் என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பாளர் : இப்னு மஸ்ஊத் (ரலி)
நூல் : (புகாரி : 3603)
            உலர்ந்த திராட்சைப் போன்ற (சுருங்கிய) தலையுடைய அபிசீனிய (கருப்ப நிற) அடிமையொருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் (அவரது சொல்லை) கேளுங்கள். (அவருக்கு) கீழ்படியுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக்
நூல் : (புகாரி : 7142)
(4)   எஞ்சியதை தர மறுத்தவன்
            தனது கிணற்றின் நீரையோ அல்லது குளத்தின் நீரையோ அவன் அதை பயன்படுத்தியதற்குப் பிறகு எஞ்சிய நீரை பிறர் பயன்படுத்த விடாமல் தடுத்தவனும் இந்த துர்பாக்கிய நிலையை அடைவான்
            இன்னொருவன் தன் தேவைக்கு மேல் எஞ்சியிருந்த தண்ணீரை (மக்கள் உபயோகிப்பதைத்) தடுத்தவன் ஆவான். (மறுமையில்) அவனை நோக்கி உன் கரங்கள் உருவாக்காத தண்ணீரின் மீதத்தை மக்கள் உபயோகிக்கவிடாமல் தடுத்ததைப் போலவே இன்று நான் எனது அருளிலிருந்து உன்னைத் தடுக்கிறேன் என்று அல்லாஹ் கூறுவான்.
அறிவிப்பாளர் : அபூஹீரைரா (ரலி)
நூல் : (புகாரி : 2369)
            . தண்ணீர் மனிதர்களுக்கு அவசியம் தேவை. தண்ணீர் இல்லாமல் எந்த உயிரினமும் உயிர்வாழ முடியாது. வழிபோக்கர்கள் பிரயாணிகள் போன்றோர்களுக்கு தண்ணீர் அதிகம் தேவைப்படும். இரக்கம் இல்லாதவர்கள் தான் இது போன்ற செயலைச் செய்வார்கள். அதுவும் எஞ்சிய நீரை குடிக்கவிடாமல் தடுக்கிறான் என்றால் அவனைப் போன்று கொடிய எண்ணம் உள்ளவன் வேறு யார் இருக்க முடியும்.
 தண்ணீர் என்பது நாமாக உருவாக்கும் பொருள் இல்லை. அல்லாஹ்வின் அருளால் நமக்கு கிடைக்கும் அற்புதமாகும். இந்த அற்புதத்தை பிறர் அனுபவிக்கவிடாமல் தடுத்தவனுக்கு அல்லாஹ் மறுமையில் தனது அருளைத் தடுத்துவிடுவான்.
அல்லாஹ்வுக்கும் நமக்கும் மத்தியில் உள்ள பாவங்களை அல்லாஹ் தான் நாடினால் மண்ணிப்பான். ஆனால் அடியார்களுக்கு நாம் செய்த பாவங்களை அந்த அடியார் மண்ணித்தாலேத் தவிர வேறு யாரும் மண்ணிக்க முடியாது. நாம் பிறருக்கு இரக்கப்பட்டால் தான் அல்லாஹ் நமக்கு இரக்கப்படுவான். இரக்கப்படாதவர் இரக்கம் காட்டப்படமாட்டார்.
அறிவிப்பாளர் : அபூஹீரைரா (ரலி)
நூல் : (புகாரி : 5997)
     ஓரு நாய்க்கு இரக்கப்பட்டு தண்ணீர் கொடுத்த விபச்சாரியையே அல்லாஹ் மண்ணித்து விட்டான். பூனைக்கு இரக்கம் காட்டாத பெண்னை நரகத்திற்குத் தள்ளினான்.
     (முன்னொரு காலத்தில்) நாய் ஓன்று ஓரு கிணற்றை சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தது. அது தாகத்தால் செத்துவிடும் நிலையில் இருந்தது. அப்போது பனூ இஸ்ராயீல் சமுதாயத்தின் விபச்சாரிகளில் ஓருத்தி அதைப் பார்த்தாள். உடனே அவள் தன் காலுறையைக் கழற்றி (அதில் தண்ணீரை எடுத்து) அந்த நாய்க்கு புகட்டினாள். அதன் காரணமாக அவளுக்கு பாவமண்ணிப்பு வழங்கப்பட்டது.
அறிவிப்பாளர் : அபூஹீரைரா (ரலி)
நூல் : (புகாரி : 3467)
     மேலுள்ள ஹதீஸில் தண்ணீரைத் தடுத்ததாக வந்துள்ளது. தண்ணீரைப் போன்று உணவு உடை போன்றவை மீதமாக இருந்தும் பிறர் கேட்கும் போது தர மறுப்பவர்களும் இதில் அடங்குவாôகள். இன்று நம்மில் பெரும்பாலானோர் தேவைக்கு அதிகமாகவே எல்லாவற்றையும் வைத்துள்ளோம். ஓன்றுமில்லாமல் வாழும் மக்கள் உலகில் ஏராளமாக இருக்கின்றார்கள். இதை நாம் சற்று கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
(5)   பெருமைக்காக ஆடையை கணுக்காலுக்கு கீழே கட்டியவன்
            மனிதன் முழுக்க முழுக்க பெருமை கொள்வதற்கு தகுதியற்றவனாக இருக்கின்றான். அவன் தன்னுடைய சொந்த முயற்சியால் தான் எல்லாவற்றையும் பெறுவதாக எண்ணிக்கொண்டிருக்கிறான். அவன் வசதியாக உடல்நலத்துடன் வாழ்வது அல்லாஹ் அவனுக்குப் போட்ட பிச்சை என்பதை மறந்துவிடுகின்றான். ஆணவத்துடன்  தனது நடை பாவனைகளை அமைத்துக் கொள்கிறான். நபியாக இருந்தாலும் பெறுமைகொள்வதற்கு அனுமதியில்லை.
பூமியில் கர்வத்துடன் நடக்காதே! நீ பூமியைப் பிளந்துமலைகளின் உயரத்தின்
அளவை அடையவே மாட்டாய்!
அல்குர்ஆன் (17 : 37)
பொருள் இல்லாதவர்களை ஏழனமாக நினைத்து தன்னை உயர்ந்தவன் என்று சமுதாயத்தில் காட்டிக்கொள்கிறான். இறைவன் நினைத்தால் நம்மையும் அந்த ஏழையைப் போன்று ஆக்கிவிடுவான் என்ற பயம் அவனுக்கு இல்லை. அனைத்து மக்களுக்கும் பாடமாக அல்லாஹ் அவனுக்கு இவ்வுலகத்திலேயே தண்டனையை வழங்கிவிடுகின்றான்.
நபி (ஸல்) அவர்களிடத்தில் ஓரு மனிதர் இடதுகையால் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். நபி (ஸல்) அவர்கள் உன் வலது கையால் சாப்பிடு என்று கூறினார்கள். (அதற்கு அவர்) என்னால் முடியாது என்று கூறினார். பெருமையே அவரை (வலது கையில் சாப்பிடவிடாமல்) தடுத்தது. பிறகு அவரால் கையை வாய்க்கு அருகில் கொண்டு செல்ல முடியவில்லை.
அறிவிப்பாளர் : சலமா பின் அகூஃ
நூல் : (புகாரி : 3766)
 ஏராளமான பலகீனங்களுடன் வயிற்றில் மலம் ஜலத்தை சுமந்து கொண்டு வாழும் தனக்கு எதற்குப் பெறுமை என்று நினைப்பதில்லை. பெருமை கொள்வதற்கு பூரணமானத் தகுதி அல்லாஹ் ஓருவனுக்கு மட்டும் தான் உள்ளது. அல்லாஹ்வுக்கு மட்டும் சொந்தமான இந்தப் பெருமையில் யாரேனும் பங்கிற்கு வந்தால் அல்லாஹ் அவரை சுவர்க்கத்தில் நுழைய விடமாட்டான்.
            யாருடைய உள்ளத்தில் அனு அளவு தற்பெருமை இருக்கின்றதோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல் : (முஸ்லிம் : 147)
            பெருமை எது என்பதை சரியாகப் புரிந்து கொள்ளாமல் நம்மை அலங்கரித்துக்கொல்லாமலும் விரும்பிய அழகிய ஆடைகளையும் அணியாமலும் இருக்கக்கூடாது. பெருமை எது என்று நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்திவிட்டார்கள்.
            யாருடைய உள்ளத்தில் அனு அளவு தற்பெருமை இருக்கின்றதோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். தமது ஆடை அழகாக இருக்க வேண்டும். தமது காலணி அழகாக இருக்க வேண்டுமென ஓருவர் விரும்புகிறார். (இதுவும் தற்பெருமையில்) சேருமாஎன்று அப்போது ஓரு மனிதர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ் அழகானவன் அழதையே அவன் விரும்புகிறான். தற்பெருமை என்பது (ஆணவத்தோடு) உண்மையை மறுப்பதும் மக்களை கேவலமாக மதிப்பதும் தான் என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல் : (முஸ்லிம் : 147
பெருமையோடு ஆடையை கணுக்காலுக்கு கீழே தொங்விட்டவனை அல்லாஹ் மறுமையில் கண்டுகொள்ள மாட்டான். அவர்களுக்கு தண்டனையையும் வழங்குவான் என்று நபி (ஸல்) அவாகள் கூறியுள்ளார்கள்.
            மூன்று பேரிடம் அல்லாஹ் மறுமையில் பேசமாட்டான். அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான். அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்கு துன்பம் தரும் வேதனை தான் உண்டு என்று நபி (ஸல்) அவாகள் கூறினார்கள். இதையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று முறைகள் கூறினார்கள். நான் (அவ்வாறாயின்) அவர்கள் இழப்புக்குள்ளாகிவிட்டனர். நஷ்டமடைந்து விட்டனர். அவர்கள் யார் அல்லாஹ்வின் தூதரே என்று கேட்டேன். அதற்கு தமது ஆடையை (கணுக்காளுக்கு) கீழே இறக்கிக்கட்டியவர். (செய்த உபகாரத்தை) சொல்லிக்காட்டுபவர். பொய் சத்தியம் செய்து தமது சரக்கை விற்பனை செய்பவர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூதர் (ரலி) அவர்கள்
நூல் : (முஸ்லிம் :171)
            ஆங்கிலேய நாகரீகம் ஓங்கி நிற்கும் இக்காலகட்டத்தில் இஸ்லாமிய இளைஞர்களும் விதிவிலக்கில்லாமல் பெருமைக்காக ஆடையை தரையில் இழுபடுமாறு அணிந்து செல்கிறார்கள். இதை நாம் ஓரு குற்றமாக எடுத்துக்கொள்வதில்லை. இந்த குற்றத்திற்கு அல்லாஹ் இந்த உலகத்திலேயே சிலருக்கு தண்டனையை வழங்கிவிடுகின்றான்.
            (முன் காலத்தில்) ஓருவன் தன் கீழங்கியை தற்பெருமையின் காரணத்தினால் (கணுக்காலின் கீழ் தொங்கவிட்டு) இழுத்துக்கொண்டே நடந்த பொழுது (பூமி பிளந்து அதில்) அவன் புதைந்து போகும்படி செய்யப்பட்டான். அவன் மறுமை நாள் வரை பூமிக்குள் அழுந்திச் சென்றுகொண்டே இருப்பான்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
நூல் : (புகாரி : 3485)
(6)   செய்த உதவியை சொல்லிக்காட்டுபவன்
            பிறருக்கு தான் செய்த உதவியை சொல்லிக் காட்டுபவனை அல்லாஹ் பார்க்கமாட்டான். அவனிடம் பேசமாட்டான். அவனை பாவத்திலிருந்து தூய்மைப்படுத்தவும் மாட்டான்.
 நம் சமுதாயத்தில் உதவி செய்யும் நபர்கள் மிகவும் குறைவாகவே இருக்கிறார்கள். அதிலும் தான் செய்த உதவியை சொல்லிக்காட்டாமல் இருப்பவர்கள் மிகவும் குறைவு தான். உதவி செய்யாதவனை விட உதவி செய்துவிட்டு சொல்லிக்காட்டுபவன் அதிக குற்றத்திர்குரியவன். அவனுக்கு சாதாரண தண்டனை மறுமையில் கிடைக்காது. கடுமையான தண்டனை உண்டு என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
            மூன்று பேரிடம் அல்லாஹ் மறுமையில் பேசமாட்டான். அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான். அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்கு துன்பம் தரும் வேதனை தான் உண்டு என்று நபி (ஸல்) அவாகள் கூறினார்கள். இதையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று முறைகள் கூறினார்கள். நான் (அவ்வாறாயின்) அவர்கள் இழப்புக்குள்ளாகிவிட்டனர். நஷ்டமடைந்து விட்டனர். அவர்கள் யார் அல்லாஹ்வின் தூதரே என்று கேட்டேன். அதற்கு தமது ஆடையை (கணுக்காளுக்கு) கீழே இறக்கிக்கட்டியவர். (செய்த உபகாரத்தை) சொல்லிக்காட்டுபவர். பொய் சத்தியம் செய்து தமது சரக்கை விற்பனை செய்பவர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூதர் (ரலி) அவர்கள்
நூல் : (முஸ்லிம் : 171)
தான் உதவி செய்தது பிறருக்குத் தெரிய வேண்டும் என்பதற்காக செய்த உதவியை சொல்லிக்காட்டுபவன் கோடி கோடியாக அள்ளித்தந்தாலும் அவருக்கு அணு அளவு கூட நன்மை கிடைக்காதுஇதற்கு அல்லாஹ் குர்ஆனில் தெளிவான உதாரணத்தைக் கூறுகின்றான்.
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வையும்இறுதி நாளையும் நம்பாது மக்களுக்குக் காட்டுவதற்காக தனது செல்வத்தைச் செலவிடுபவனைப் போல்உங்கள் தர்மங்களைச் சொல்லிக் காட்டியும்தொல்லை தந்தும் பாழாக்கி விடாதீர்கள்! இவனுக்கு உதாரணம் மேலே மண் படிந்திருக்கும் வழுக்குப் பாறை. அதன் மேல் மழை விழுந்ததும் மேலே ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுகிறது. தாம் பாடுபட்ட எதன் மீதும் அவர்கள் சக்தி பெற மாட்டார்கள். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.
அல்குர்ஆன் (2 : 264)
ஓரு வழவழப்பான் பாறையில் மண் படிந்திருக்கிறது. அந்தப் பாறையின் மீது மழை நீர் விழும்போது பாறையின் மீதுள்ள மண் மழை நீரால் அடித்துச் செல்லப்பட்டு  சிதறி காணாமல் போய்விடும்பாறையின் மீது சிறிய மண்துகளைக்க கூட காணமுடியாது. இது போன்று பிறர் பார்ப்பதற்காக தர்மம் செய்தவனின் செயல்கள் அûûத்தும் அளிக்கப்பட்டுவிடுகிறது. சிறிது கூட நன்மை கிடைக்காது இதையே அல்லாஹ் இந்த உதாரணத்தின் மூலம் விளக்குகின்றான்.
தான் செய்த உதவியை சொல்லிக்காட்டாதவற்களுக்குத் தான் நன்மை உண்டு என்று பின்வரும் வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான்.
அல்லாஹ்வின் பாதையில் தமது செல்வங்களைச் செலவிட்டுபின்னர் செல விட்டதைச் சொல்லிக் காட்டாமலும்தொல்லை தராமலும் இருப்போருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனி டம் உள்ளது. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. கவலைப்படவும் மாட்டார்கள்.
அல்குர்ஆன் (2 : 262)
அல்லாஹ் குôஆனில் சொர்க்கவாசிகளின் சில பண்புகளை சுட்டிக்காட்டுகிறான்.அவர்கள் யாருக்கு உதவிசெய்வார்களோ அவர்களிடத்தில் எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்க மாட்டார்கள். மக்கள் தன்னைப் புகழ வேண்டும் என்வதற்காக உதவாமல் அல்லாஹ்வின் பொறுத்தத்தைப் பெறுவதற்காகவே உதவுவார்கள் என்று அல்லாஹ் கூறுகின்றான்.
அவனை நேசித்ததற்காக ஏழைக்கும்அனாதைக்கும்சிறைப்பட்டவருக்கும் உணவளிப்பார்கள். அல்லாஹ்வின் முகத்துக்காகவே உங்களுக்கு உணவளிக்கிறோம். உங்களிட மிருந்து பிரதிபலனையோநன்றியையோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை
அல்குர்ஆன் (76 : 8)
(7)   விபச்சாரம் செய்த வயோதிகன்
பொதுவாக வயோதிகம் என்பது மனிதனின் ஆசை உணர்வுகள் எல்லாம் அடங்கிவிட்ட நிலையாகும். ஓரு வாளிபனுக்கு இருக்கும் ஆசை வயோதிகனுக்கு இருக்காது. அவனைக் கட்டுப்படுத்திக்கொள்ளும் ஆற்றல் அவனிடத்தில் அதிகமாகவே இருக்கும். இந்த காலக்கட்டத்தில் அவன் விபச்சாரம் செய்வது அல்லாஹ்வின் பயம் இல்லாமல் துணிந்து பாவம் செய்வதைக் காட்டுகிறது. எனவே தான் அல்லாஹ் இவனுக்கு இந்த தண்டனையை வழங்குகிறான்
மறுமை நாளில் மூன்று நபர்களிடத்தில் அல்லாஹ் பேசமாட்டான். அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். அவர்களை ஏறெடுத்தும் பார்க்கமாட்டான். (அவர்களில் ஓருவன்) விபச்சாரம் செய்யும் கிழவன். (மற்றொருவன்) பொய் கூறும் அரசன். (மற்றொருவன்) பெருமையடிக்கும் ஏழை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹீரைரா (ரலி)
நூல் : (முஸ்லிம் : 156)
அல்லாஹ்வின் பார்வையில் பெறும்பாவமாக கருதப்படும் பாவங்களில் விபச்சாரம் செய்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூன்றாவது பாவமாக கூறினார்கள். அல்லாஹ் பெரும்பாவமாக ஓன்றை நினைக்கிறானென்றால் அதற்கு சாதாரண தண்டனையா கிடைக்கும். இந்த விஷயத்தில் நாம் அதிகம் எச்சரிக்கையுடன் இருக்கு வேண்டும்.
நான் நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்விடத்தில் பாவங்களில் மிகப்பெரியது எது என்று கேட்டேன். அதற்கு அவர்கள் அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க அவனுக்கு நீ இணைகற்பிப்பது என்று சொன்னார்கள். நிச்சயமாக அது மிகப்பெரிய குற்றம்தான் என்று சொல்லிவிட்டு பிறகு எது என்று கேட்டேன். உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உனவைப் பங்கு போட்டு) உண்ணும் என அஞ்சி அதனை நீ கொள்வது என்று சொன்னார்கள். நான் பிறகு எது என்று கேட்க உன் அண்டை வீட்டானின் மனைவியுடன் நீ விபச்சாரம் செய்வது என்று சொன்னார்கள்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல் : (புகாரி : 4477)
ஓரு முஸ்லிம் விபச்சாரம் செய்யும் நேரத்தில் அவன் இஸ்லாத்தை விட்டும் வெளியேறிவிடுகின்றான். அந்நேரத்தில் அவனுக்கு மரணம் சம்பவித்தால் காஃபிராக இருக்கும் நிலையிலே அவன் மரணிக்கின்றான். அவன் முன்பு ஈமான் கொண்டதற்கு எந்தப் பலனும் இருக்காது. காலமெல்லாம் பாவியாக இருந்து விட்டு மரணவேலையில் திருந்தி சொர்க்கத்திற்குச் செல்லும் மனிதர்களும் இருக்கிறார்கள். காலமெல்லாம் நல்லமல்களைச் செய்து விட்டு இறுதி நேரத்தில் பாவியாக மரணிக்கும் துர்பாக்கியவான்களும் உண்டு. நமது இறுதி நிலையே நம்மை சுவர்க்கவாதியாகவோ அல்லது நரகவாதியாகவோ என்று நிர்ணயிக்கிறது. ஆக இந்த கொடிய பாவத்திலிருந்து நம்மை காத்துக் கொள்ளவது நமது முதல் வேலையாக இருக்க வேண்டும்.
விபச்சாரன் விபச்சாரம் புரியும் போது முஃமினாக இருந்து கொண்டு விபச்சாரம் புரிவதில்லை. மேலும் மது அருந்தும் போது ஓருவன் முஃமினாக இருந்து கொண்டு மது அருந்துவதில்லை. ஓருவன் திருடுகின்ற போது முஃமினாக இருந்து கொண்டு திருடுவதில்லை. ஓருவன் மக்கள் பார்த்துக்கொண்டிருக்க (பிறரது பொருளை அபகரித்து) கொள்ளையடிக்கும் போது முஃமினாக இருந்து கொண்டு கொள்ளையடிப்பதில்லை.
அறிவிப்பாளர் : அபூஹீரைரா (ரலி)
நூல் : (புகாரி : 2475)
இந்தக் குற்றத்தை செய்தவர்களுக்கு 100 கசையடிகளை தரும் படி அல்லாஹ் நமக்கு கட்டளையிடுகின்றான். அவர்களுக்கு இரக்கம் காட்டக்கூடாது என்றும் அறிவுறுத்துகின்றான். அவர்கள் வெட்கப்பட்டு தலைகுனிவதற்காகவும் மற்றவர் எவரும் இந்த மானக்கேடான செயலில் ஈடுபடாமல் இருப்பதற்காகவும் அவர்கள் பெறும் தண்டனையை காணும் படியும் கூறுகின்றான்.
விபச்சாரம் செய்யும் பெண்ணையும்விபச்சாரம் செய்யும் ஆணையும் அவர்கள் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்!  நீங்கள் அல்லாஹ்வையும்இறுதி நாளையும் நம்பினால் அல்லாஹ்வின் சட்டத்தில் அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம். அவ்விருவர் தண்டிக்கப் படுவதை நம்பிக்கை கொண்டோரில் ஒரு கூட்டம் பார்த்துக் கொண்டிருக்கட்டும்.
அல்குர்ஆன் (24 : 2)
(8)   பொய்கூறும் அரசன்
பொதுவாக அரசன் குடிமக்களில் யாரைக் கண்டும் அஞ்சவேண்டிய அவசியம் இல்லையாரையும் குளிர வைத்து காரியம் சாதிக்க வேண்டிய நெருக்கடியும் அவனுக்கு கிடையாது. அனைத்து அதிகாரத்தையும் கையில் வைத்திருக்கும் அவன் பொய் சொல்லத் தேவையில்லை. இந்நிலையில் அவன் பொய் சொல்வது பொய்சொல்வதில் அவனுக்கு அதிகம் துணிவு இருப்பதைக் காட்டுகிறது. பல நிர்பந்தங்கள் உள்ள சாதாரண மக்கள் பொய் சொல்லக்கூடாது என்றிருக்கும் போது எந்த நிர்பந்தமும் இல்லாத இவன் பொய் சொல்வது அதிக குற்றமாக உள்ளது. இந்தக் காரணத்தினால் இவனும் இந்த துரதிஷ்டநிலையை அடைகின்றான்.
            மறுமை நாளில் மூன்று நபர்களிடத்தில் அல்லாஹ் பேசமாட்டான். அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். அவர்களை ஏறெடுத்தும் பார்க்கமாட்டான். (அவர்களில் ஓருவன்) விபச்சாரம் செய்யும் கிழவன். (மற்றொருவன்) பொய் கூறும் அரசன். (மற்றொருவன்) பெருமையடிக்கும் ஏழை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹீரைரா (ரலி)
நூல் : (முஸ்லிம் : 172)
சிறிய சிறிய விஷயங்களுக்கெல்லாம் இன்று நாம் சாதாரணமாக பொய்சொல்கின்றோம். நல்ல வார்த்தைகளைக் கூறுவதைப் போல் பொய்களை அள்ளி வீசுகின்றோம். நாம் பேசும் பேச்சில் உண்மைகளை விட பொய்களே மிகைத்திருக்கிறது. இதை நாம் ஓரு பொருட்டாக் கருதுவதில்லை. ஆனால் இவ்வாறு பொய் சொல்வது நயவஞ்சகர்களின் குணம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நயவஞ்சகனின் அடையாளம் மூன்று. அவன் பேசினால் பொய்யையே பேசுவான். வாக்களித்தால் மாறுசெய்வான். அவனை நம்பி எதையும் ஓப்படைத்தால் (அதில்) மோசடி செய்வான்.
அறிவிப்பாளபர் : அபூஹீரைரா (ரலி)
நூல் : (புகாரி : 33)
நாம் சொல்லும் பொய்கள் நம்மை நரகத்திற்கு கொண்டு சென்றுவிடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
உண்மை நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும். நன்மையானது நிச்சயம் சொர்க்கத்திற்கு வழிகாட்டும். ஓரு மனிதர் உண்மைப் பேசிக்கொண்டே இருப்பார். இறுதியில் அவர் வாய்மையாளராக ஆகிவிடுவார். பொய் நிச்சயமாக தீமைக்கு வழிவகுக்கும். தீமை நரகத்திற்கு வழிவகுக்கும். ஓரு மனிதர் பொய் பேசிக்கொண்டே இருப்பார். இறுதியில் அவர் அல்லாஹ்விடம் பெறும் பொய்யர் எனப்பதிவு செய்யப்பட்டுவிடுவார்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்
நூல் : (புகாரி : 6094)
(9)   பெருமையடிக்கும் ஏழை
பொதுவாக தற்பெருமை கொள்வதற்கு காரணமாக அமைவது செல்வாக்குத் தான். அந்த செல்வாக்கு இல்லாத ஏழை தற்பெருமை கொள்கின்றான் என்றால் அவன் வரட்டு கௌரவம் கொள்கின்றான் என்றே சொல்லப்படும். ஆக சந்தர்ப்ப சூழ்நிலையைக் கூட காரணம் காட்டமுடியாக இவன் இப்பாவத்தில் ஈடுபடுவதற்கு காரணம் அல்லாஹ்வுடைய விஷயத்தில் அவனுடைய அலட்சியப் போக்குத்தான். எனவே இவன் மீதும் அல்லாஹ் கோபம் கொள்கிறான்.
மறுமை நாளில் மூன்று நபர்களிடத்தில் அல்லாஹ் பேசமாட்டான். அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். அவர்களை ஏறெடுத்தும் பார்க்கமாட்டான். (அவர்களில் ஓருவன்) விபச்சாரம் செய்யும் கிழவன். (மற்றொருவன்) பொய் கூறும் அரசன். (மற்றொருவன்) பெருமையடிக்கும் ஏழை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹீரைரா (ரலி)
நூல் : (முஸ்லிம் : 172)
பெறுமை கொள்வதற்குரிய தண்டனைகளை கணுக்காலுக்கு கீழே ஆடையை தொங்விடுபவன் என்ற தலைப்பிற்குள் விரிவாகப் பார்த்துவிட்டோம். ஓரு முஃமின் சொர்க்கத்தில் நுழைவதற்கு பெருமை மாபெரும் தடைக்கல்லாக நிற்கிறது.
யார் பெறுமை மற்றும் மோசடி மற்றும் கடன் ஆகியவற்றை விட்டு நீங்கியவராக மரணிக்கிறாரோ அவர் சொர்க்கத்தில் நுழைந்துவிட்டார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : சவ்பான் (ரலி)
நூல் : (திர்மிதி : 1497)
(10)                       பெற்றோர்களை விட்டு ஓதுங்கியவன்
மனிதநேயத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் இக்காலகட்டத்தில் முதியோர் இல்லங்கள் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. மிருகங்களிடத்தில் காட்டும் அன்பையும் பாசத்தையும் தன்னைப் பெற்றெடுத்த பெற்றோரிடத்தில் யாரும் காட்டுவதில்லை. உரிமை பரிக்கப்படும் போது ஓங்கி எழும் குரல்கள் பெற்றோர்களின் உரிமை பரிக்கப்படும் போது ஓய்ந்துவிடுகின்றன.
            தன்னை எவ்வளவு சிரமத்திற்கு மத்தியில் வளர்த்திருப்பார்கள் என்று பிள்ளைகள் நினைத்துப்பார்ப்பதில்லை. மனிதன் தனக்கு திருமணம் ஆகாத வரைக்கும் பெற்றோரை கவனிக்கின்றான். அவனுக்கு ஓரு துணை வந்துவிட்டால் பெற்றோர்களை மறந்துவிடுகின்றான். மனைவியுடன் தனிக்குடித்தனம் சென்றவன் தாய் தந்தையை அனாதையாக தவிக்க விட்டுவிடுகிறான். இந்த மாபெரும் பாவச்செயலில் ஈடுபடுவோரை அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான். அவர்களிடத்தில் பேச மாட்டான். அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான்.
            அல்லாஹ்விற்கு சில அடியார்கள் உண்டு. மறுமை நாளில் அல்லாஹ் அவர்களுடன் பேசமாட்டான். அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். அவர்களைப் பார்க்கவும் மாட்டான் என்று நபி (ஸல்) அவாகள் கூறினார்கள். (அப்போது) அல்லாஹ்வின் தூதரே அவர்கள் யார் என்று கேட்கப்பட்டது. (அதற்கு) நபி (ஸல்) அவர்கள் (ஓருவன்) தனது பெற்றோரை வெறுத்து அவர்களை விட்டு விலகியவன். (மற்றொருவன்) தனது பிள்ளையை விட்டு விலகியவன். (மற்றொருவன்) ஓரு கூட்டம் அவனுக்கு உதவி செய்தது. அவன் அவர்கள் செய்த உதவிக்கு நன்றி மறந்து அவர்களை விட்டும் விலகியவன் என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் :முஆத் பின் அனஸ் (ரலி)
நூல் : (அஹ்மத் : 15083)
(11)                       தன் பிள்ளையை விட்டு விலகியவன்
சிலர் பெற்றெடுப்பது மட்டும் தான் கடமை என்று எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பெற்றெடுத்த பிள்ளைகளை ஓழுக்கமாக பண்புடன் வளர்க்கத் தவறிவிடுகிறார்ள். அவர்களுடைய அடிப்படைத் தேவைகளை கூட நிறைவேற்றாமல் அநாதையாக விட்டுவிடுகிறார்கள். இதனால் அவர்கள் சமுதாயத்தில் தீயவர்களாக வளர்கிறார்கள். பெற்றோரின் பாசம் இல்லாத காரணத்தினால் முரடர்களாக மாறுகிறார்கள். இது போன்ற காரணங்களால் அல்லாஹ் தன்  பிள்ளைக்கு செய்ய வேண்டிய  கடமைகனள நிறைவேற்றாமல் விலகியவனுக்கு இந்த தண்டனையைத் தருகின்றான்.
அல்லாஹ்விற்கு சில அடியார்கள் உண்டு. மறுமை நாளில் அல்லாஹ் அவர்களுடன் பேசமாட்டான். அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். அவர்களைப் பார்க்கவும் மாட்டான் என்று நபி (ஸல்) அவாகள் கூறினார்கள். (அப்போது) அல்லாஹ்வின் தூதரே அவர்கள் யார் என்று கேட்கப்பட்டது. (அதற்கு) நபி (ஸல்) அவர்கள் (ஓருவன்) தனது பெற்றோரை வெறுத்து அவர்களை விட்டு விலகியவன். (மற்றொருவன்) தனது பிள்ளையை விட்டு விலகியவன். (மற்றொருவன்) ஓரு கூட்டம் அவனுக்கு உதவி செய்தது. அவன் அவர்கள் செய்த உதவிக்கு நன்றி மறந்து அவர்களை விட்டும் விலகியவன் என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : முஆத் பின் அனஸ் (ரலி)
நூல் : (அஹ்மத் : 15083)
            மனிதன் இறந்ததற்குப் பின்னாலும் அவனுக்கு நன்மையை ஈட்டித்தரக்கூடியதாக  அவனால் நல்ல முறையில் வளர்க்கப்பட்ட பிள்ளைகள் ஆகும். இவனது பிள்ளைகள் இவனுக்காக பிரார்த்தனை செய்யும் போதெல்லாம் இறந்துவிட்ட இவனுக்கு நன்மை கிடைத்துக்கொண்டே இருக்கும்.
            மனிதன் இறந்துவிட்டால் மூன்றைத் தவிர அவனுடைய நல்ல செயல்பாடுக்ள் முடிவுபெற்றுவிடுகின்றன். (ஓன்று) நிலையான சொர்க்கம் (மற்றொன்று) பிரயோஜனமிக்க கல்வி (மற்றொன்று) அவனுக்காக பிரார்த்தனை செய்யும் நல்ல பிள்ளை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹீரைரா (ரலி)
நூல் : (முஸ்லிம் : 3084)
(12)                       நன்றி மறப்பவன்
            ஓருவன் தன்னைப் போன்ற ஓருவனுக்கு செய்யும் தீமைகளில் நன்றி மறப்பதும் ஓன்றாகும்.இக்குற்றத்தை செய்வோரிடமும் அல்லாஹ் பேசமாட்டான். அவர்களை ஏறெடுத்துப் பார்க்க மாட்டான்.
            அல்லாஹ்விற்கு சில அடியார்கள் உண்டு. மறுமை நாளில் அல்லாஹ் அவர்களுடன் பேசமாட்டான். அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். அவர்களைப் பார்க்கவும் மாட்டான் என்று நபி (ஸல்) அவாகள் கூறினார்கள். (அப்போது) அல்லாஹ்வின் தூதரே அவர்கள் யார் என்று கேட்கப்பட்டது. (அதற்கு) நபி (ஸல்) அவர்கள் (ஓருவன்) தனது பெற்றோரை வெறுத்து அவர்களை விட்டு விலகியவன். (மற்றொருவன்) தனது பிள்ளையை விட்டு விலகியவன். (மற்றொருவன்) ஓரு கூட்டம் அவனுக்கு உதவி செய்தது. அவன் அவர்கள் செய்த உதவிக்கு நன்றி மறந்து அவர்களை விட்டும் விலகியவன் என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : முஆத் பின் அனஸ் (ரலி)
நூல் : (அஹ்மத் : 15083)
பிறர் செய்த உதவியை எண்ணிப் பார்க்காமல் நன்றிகெட்டு நடப்பவர் அல்லாஹ்வுக்கு எவ்வுளவுதான் நன்றி செலுத்தினாலும் உதவிசெய்தவருக்கு நன்றி செலுத்தும் வரை அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தியவராக ஆகமுடியாது. இதையே பின்வரும் ஹதீஸ் உணர்த்துகிறது.
            மக்களுக்கு நன்றி செலுத்தாதவன் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தியவனாக ஆகமாட்டான்.
அறிவிப்பாளர் : அபூஹீரைரா (ரலி)
நூல் : (திர்மிதி : 1877)
            தனக்கு உதவியவருக்கு நன்றி செலுத்தும் முறையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழகாக விளக்கியுள்ளார்கள்.
            (உங்களில்) ஓருவருக்கு நன்மை செய்யப்பட்டு அவர் அந்நன்மை செய்தவருக்கு جَزَاكَ اللَّهُ خَيْرًا  (அல்லாஹ் உங்களுக்கு நன்மையை கூலியாக வழங்குவானாக) என்று கூறினால் அவர் அதிகமாக நன்றி செலுத்தியவராகிவிட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்,
அறிவிப்பாளர் : உஸாமா பின் ஸைத் (ரலி)
நூல் : (திர்மிதி : 1958)
            அதாவது நீங்கள் எனக்கு செய்த உதவிக்கு பிரதி உபகாரம் என்னால் செய்ய முடியாது. இதற்கான கூலியை என்னால் வழங்க முடியாது. அல்லாஹ்வே இதற்கு உங்களுக்கு கூலி தருவான் என்பது இந்த ஹதீஸின் பொருளாகும்.
            நமக்கு உதவி செய்தவருக்கு பதிலாக நாம் நன்றி செலுத்தும் முகமாக நாம் அவருக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
            உங்களுக்கு யாரேனும் நன்மை செய்தால் அவருக்கு பிரதி உபகாரமாக எதையாவது கொடுங்கள். பிரதி உதவி செய்வதற்கு உங்களிடத்தில் எதுவும் இல்லையென்றால் நீங்கள் அவருக்கு பரிகாரம் செய்துவிட்டதாக எண்ணும் வரை அவருக்காக துஆ செய்யங்கள் என்று நபி (ஸல்) அவாகள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் இப்னு உமர்
நூல் : (அஹ்மத் : 5110)
நபி (ஸல்) அவர்கள் அன்பளிப்பை ஏற்று அதற்கு (பதிலாக எதையாவது கொடுத்து) ஈடுசெய்து வந்தார்கள்.
அறிவிப்பாளர் :ஆயிஷா (ரலி) அவர்கள்
நூல் : (புகாரி : 2585

1 comment:

  1. அஹ்மத் 15083 செய்தி பலவீனம் என கேள்விப்பட்டேன். மீளாய்வு செய்யவும்

    ReplyDelete

Moon Phases

Quran Search

Search in the Quran
Search in the Quran:
in
Download Islamic Softwares FREE | Free Code
தமிழில் தேட http://www.tamililquran.com/quransearch.php

Hadith Search

Search in the Hadith
Search:
in
Download | Free Code
தமிழில் தேட http://www.tamililquran.com/bukharisearch.php

Muslim Baby Names for Boys and Girls

Search Muslim Baby Names for Boys and Girls
Find Name:
Show all the Boy Names
A B C D E F G H I J K L M N
O P Q R S T U V W X Y Z
Show all the Girl Names
A B C D E F G H I J K L M N
O P Q R S T U V W X Y Z

English to Arabic to English Dictionary

English to Arabic to English Dictionary
Find word:
Exact Word / Starting Word Sub Word
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Download Dictionary on Mobile Phone
www.SearchTruth.com