🍲🍥 உணவில் பரகத்தை பெறும் வழிகள்🍥🍲
🅾🅾🅾🅾🅾🅾🅾🅾🅾🅾
💮நமது உணவை பரகத் நிறைந்ததாக ஆக்கிக கொள்வதற்கு கடைபிடிகக வேண்டிய ஒழங்குகளை நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். நம்பிக்கையோடு அவற்றை கடைபிடித்தால் நமது உணவும். இறையருள் நிறைந்ததாக மாறிப் போகும்.
🌱1. அளந்து சமைக்க வேண்டும் :
உங்கள் உணவை (தேவைக் கேற்ப) அளந்து கொள்ளுங்கள். உங்களுக்கு பரகத் செய்யப்படும்.
📢 அறிவிப்பாளர் மிக்தாம் (ரழி)
📚நூல் : புகாரீ 2128
அஹ்மது 16548
🌱2. நடுவில் உள்ளதை சாப்பிடக் கூடாது:
உணவின் நடுப்பகுதியில் பரகத் இறங்குகிறது. எனவே
அதன் ஓரத்திலிருந்து சாப்பிடுங்கள். நடுவிலிருந்து சாப்பிடாதீர்கள்
📢 அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரழி)
📚 நூல் : திர்மிதி: 1727, அபூதாவூது : 3280 , இப்னு மாஜா : 3268 , 3045 , 3261 , 17018.
🌱3. பிஸ்மில்லாஹ் கூற வேண்டும்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமது தோழர்கள் ஆறு பேருடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள் . அங்கே வந்த கிராமவாசி ஒருவர் அதிலிருந்து இரண்டு கவள உணவைசு சாப்பிட்டார்.
இவர் பிஸ்மில்லாஹ் கூறியிருந்தால் ஒரு கவளமே இவருக்குப் போதுமானதாக இருந்திருக்கும் என நபியவரகள் இவருக்குப் போதுமானதாக இருந்திருக்கும் என நபியவர்கள் கூறினார்கள்.
📢 அறிவிப்பாளர் ஆயிஷா (ரழி)
📚 நூல் : திர்மிதி : 1781 , இப்னு மாஜா : 3255 , அஹ்மது : 23954 , 24895 , 25089.
🌱 4. மீதமின்றிச் சாப்பிட வேண்டும் :
விரல்களை சூப்பியும். தட்டையை வழித்தும் சாப்பிடுங்கள். ஏனெனில் எதில் பரகத் இருக்கிறது என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
📢 அறிவிப்பாளர்: ஜாபிர் (ரழி)
📚 நூல் : முஸ்லிம் : 3792 , 3793 , 3794 , இப்னு மாஜா : 3261 , அஹ்மது : 13705 , 14025 , 14101 , 14410 , 14689
🌱 5. பகிர்ந்து உண்ண வேண்டும் :
ஒருவர் உணவு இருவருக்குப் போதுமானதாகும். இருவர் உணவு நால்வருக்குப் போதுமானதாகும். நாலுவரின் உணவு எட்டு பேருக்குப் போதுமானதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் .
📢 அறிவிப்பாளர்: ஜாபிர் (ரழி)
📚 நூல் : முஸ்லிம் : 3836 , 3837 , இப்னு மாஜா : 3245 , அஹ்மது : 13706 , 13870 , 14572.
No comments:
Post a Comment