சுலைமான் பின் யசார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"நான் உம்மு சலமா (ரலி) அவர்களிடம் "பெருந்துடக்குடன் காலை (சுப்ஹு) நேரத்தை அடைந்த ஒரு மனிதர் நோன்பைத் தொடரலாமா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இரவில் தாம்பத்திய உறவில் ஈடுபட்டு), பெருந்துடக்குடையவர்களாக சுப்ஹு நேரத்தை அடைவார்கள்;
ஸ்கலிதம் ஏற்பட்டதால் அல்ல.
பின்னர் நோன்பைத் தொடருவார்கள்" என்று விடையளித்தார்கள்.
ஆதாரம் : முஸ்லிம் 2035.
குறிப்பு: பெருந்துடக்குடையவர்கள் தொழுவதற்கு குளிப்பு கடமை.
No comments:
Post a Comment