இன்றைய கேள்வி:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இரு தொழுகை அறிவிப்பாளர்கள் இருந்தார்கள்.
அவர்கள் யார்?
பதில்: பிலால் (ரலி) & இப்னு உம்மி மக்தூம் (ரலி).
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பிலால் அவர்கள், (பின்)இரவில் தொழுகை அறிவிப்புச்செய்வார். எனவே, (ஃபஜ்ர் தொழுகைக்காக) இப்னு உம்மி மக்தூம் செய்யும் தொழுகை அறிவிப்பை நீங்கள் கேட்கும்வரை உண்ணுங்கள்; பருகுங்கள். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம் 1991, அத்தியாயம் : 13. நோன்பு
No comments:
Post a Comment