குர்ஆனில் ஸஜ்தா வசனத்தை தொழுகையிலும் அல்லது தொழுகைக்கு வெளியிலும் ஓதும்போது ஸஜ்தா செய்வது *வலியுறுத்தப்பட்ட சுன்னாஹ்வாகும்*
📌 *தொழுகைக்கு வெளியில்* ஓதும் போது ஸஜ்தா செய்வதற்காக *உளூ கட்டாயம் இல்லை*
📌 *தொழுகைக்கு வெளியில்* “அல்லாஹ் அக்பர்” என்று கூறி ஸஜ்தா செய்வது சிறந்ததாகும்
✔️ *ஸஜ்தா திலாவத்தில் என்ன ஓத வேண்டும்.*
☑️ வழக்கமாக ஸஜ்தாவில் ஓதப்படக்கூடிய *சுப்ஹான ரப்பியல் அஃலா* கூறவேண்டும்.
☑️ மேலும், பின்வரும் இந்த துஆவையும் ஓதலாம்
ஸஜத வஜ்ஹிய லில்லதீ கலகஹு, வஷக்க ஸம்அஹு, வபசரஹு பிஹவ்லிஹி வகுவ்வதிஹி ஃப தபாரகல்லாஹு அஹ்ஸனுல் காலிகீன்.
பொருள் : எனது முகம், அதனை படைத்து, தனது ஆற்றலாலும் சக்தியாலும் அதன் காது-கண் புலன்களுக்கு வழி அமைத்துக் கொடுத்து இறைவனுக்கு ஸஜ்தா செய்துவிட்டது. படைப்பாளர்களில் மிகச் சிறந்தவனாகிய அல்லாஹ் பாக்கியம் உடையவன்.
ஆதாரம் : திர்மிதி, அஹ்மத்
📌 *ஸஜ்தா திலாவத் செய்ய வேண்டிய இடங்கள்.*
1 ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்) 7:206
2 ஸூரத்துத் ரஃது (இடி) 13:15
3 ஸூரத்துந் நஹ்ல் (தேனி) 16:49
4 பனீ இஸ்ராயீல்(இஸ்ராயீலின் சந்ததிகள்) 17:107
5 ஸூரத்து மர்யம் 19:58
6 ஸூரத்துல் ஹஜ் 22:18
7 ஸூரத்துல் ஹஜ் 22:77
8 ஸூரத்துல் ஃபுர்ஃகான் (பிரித்தறிவித்தல்) 25:60
9 ஸூரத்துந் றம்லி (எறும்புகள்) 27:25
10 ஸூரத்துஸ் ஸஜ்தா 32:15
11 ஸூரத்து ஸாத் 38:24
12 ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா 41:37
13 ஸூரத்துந் நஜ்ம் (நட்சத்திரம்) 53:62
14 ஸூரத்துல் இன்ஷிகாக் (பிளந்து போதல்) 84:21
15 ஸூரத்துல் அலஃக் (இரத்தக்கட்டி) 96:19
No comments:
Post a Comment