❓ *இன்றைய கேள்வி:* ❓
👇
*செல்வந்தர் செல்வத்திற்குரிய ஜகாத்தை(ஏழைகளுக்கு வழங்கப்படுவதற்கான வரி) அவர் கொடுக்கவில்லை என்றால் மறுமை நாளில் அவருக்குரிய தண்டனை யாது?*
பதில்:
*அவரது செல்வம் கொடிய விஷப் பற்களுடைய பாம்பாக மாற்றப்படும். அவரை அது சுற்றிக் கொண்டு அவருடைய தாடையை பிடித்து 'நான் உனது செல்வம்; உனது கருவூலம்' என்று சொல்லும்'.*
👇 *ஆதாரம்:*
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
''அல்லாஹ் ஒருவருக்கு செல்வத்தைக் கொடுத்து, அதற்குரிய ஜகாத்தை அவர் கொடுக்கவில்லை என்றால் மறுமை நாளில் அவரது செல்வம் கொடிய விஷப் பற்களுடைய பாம்பாக மாற்றப்படும். அவரை அது சுற்றிக் கொண்டு அவருடைய தாடையை பிடித்து 'நான் உனது செல்வம்; உனது கருவூலம்' என்று சொல்லும்'' என்று கூறிவிட்டு, ''கஞ்சத்தனம் செய்பவர்கள் அது தங்களுக்கு நல்லது என்று நினைக்க வேண்டாம். மாறாக அவர்களுக்குத் தீமையே! மறுமை நாளில் தாங்கள் கஞ்சத்தனம் செய்தது அவர்களுக்குத் தொங்க விடப்படும். வானங்கள் பூமியின் உரிமை அல்லாஹ்வுக்கு உரியது. அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன்'' (3:180) என்ற வசனத்தை ஓதினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி (1403)
No comments:
Post a Comment