அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
(ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள் 'உங்களில் யாருக்காவது தம் செல்வத்தை விடத் தம் வாரிசுகளின் செல்வம் விருப்பமானதாக இருக்குமா?' என்று கேட்டார்கள். தோழர்கள் 'இறைத்தூதர் அவர்களே! எங்கள் அனைவருக்குமே (வாரிசுகளின் செல்வத்தை விட) எங்களின் செல்வமே விருப்பமானதாகும்' என்று பதிலளித்தார்கள். 'அவ்வாறாயின், ஒருவர் (இறப்பதற்கு முன் அறவழியில்) செலவிட்டதே அவரின் செல்வமாகும். (இறக்கும் போது) விட்டுச் செல்வது அவரின் வாரிசுகளின் செல்வமாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: புகாரி
No comments:
Post a Comment