ஹுஸைன் இப்னு மிஹ்ஸன் (ரலி) அவர்களின் மாமி ஒரு
தேவைக்காக நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களின் தேவை முடிந்து
புறப்பட்ட போது நபி (ஸல்) அவர்கள், நீ கணவனுடன் வாழும் பெண்தானே? என்று
கேட்டார்கள். அதற்கவர், ஆம்! என்றார். நீ அவருடன் எப்படி நடந்து
கொள்கின்றாய்? என்று கேட்டார்கள். அதற்கவர், என்னால் முடியாததைத் தவிர
வேறு எதிலும் நான் அவருக்கு குறை வைக்கவில்லை என்றார். அப்போது நபி (ஸல்)
அவர்கள், அவருடைய விஷயத்தில் நீ மிகக் கவனமாக நடந்து கொள்! ஏனெனில்
நிச்சயமாக அவர்தான் உன்னுடைய சொர்க்கமும் நரகமும் ஆவர் என்றார்கள்.
அறிவிப்பவர் : ஹுஸைன் இப்னு மிஹ்ஸன் (ரலி) நூல் : அஹ்மத் 18233
No comments:
Post a Comment