ஸஜ்தா திலாவத்:
ஸஜத வஜ்ஹிய லில்லதீ கலகஹு வஷக்க ஸம்அஹு வபஸரஹு பி ஹவ்லிஹி வ குவ்வ(த்)திஹி.
பொருள்: என் முகத்தைப் படைத்து அதில் செவிப்புலனையும் பார்வைப்புலனையும் ஏற்படுத்தி, (தீயதை விட்டும்) அதைத் திருப்பி (நல்லவற்றில்) ஈடுபடுத்திய அல்லாஹ்வுக்காக என் முகம் ஸஜ்தா செய்கின்றது. நூல்:திர்மிதீ
அல்லது
‘ஸுப்ஹான ரப்பியல் அஃலா’ 3முறை.
பொருள்:‘உயர்வான எனது இரட்சகன் தூய்மையானவன்’ நூல்:அபூதாவூத்.
குறிப்பு:
இது தவிர மேலும் ஸுஜூத் செய்யும் போது எந்த துவாவை எல்லாம் ஓதலாமோ அதில் ஏதாவது ஓதலாம்.
அல்-குர்ஆனில் ஸஜ்தாவுடைய வசனங்களை ஓதும் போது ஸுஜுது செய்வது சுன்னத்தாகும்(கட்டாயமில்லை). தொழுகையின் போதும், தொழுகையல்லாத இடங்களிலும் ஸஜ்தாவுடைய வசனங்களை ஓதும் போது நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தா திலாவத் செய்துள்ளார்கள்.ஸஜ்தாவுடைய வசனங்களை கேட்கும் நபர்களும் ஸுஜுது செய்வது சுன்னத்தாகும்.
தொழுகையில் ஸஜ்தாவுடைய வசனங்களை ஓதும் போது அல்லாஹு அக்பர் என்று தக்பீர் கூறியவாறு ஸுஜுதுக்கு சென்றுவிட வேண்டும். பின்னர் மீண்டும் தக்பீர் கூறி எழுந்து நின்று விட்ட இடத்திலிருந்து குர்ஆனை ஓதவேண்டும். ஜமாத்தாக தொழும் போது இமாம் ஸஜ்தா திலாவத் செய்யும் போது அவருடன் நாமும் செய்ய வேண்டும்.பெரும்பான்மையான அறிஞர்களின் கருத்துப்படி தொழுகையல்லாத நேரத்தில் ஸஜ்தா திலாவத் செய்ய ஒழு அவசியம் இல்லை மேலும் இதற்கு தக்பீர், சலாம் கிடையாது.
எந்தெந்த குர்ஆன் வசனங்கள் ஸஜ்தா திலாவத் செய்ய வேண்டும் என்பதில் அறிஞர்களின் மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளது.

No comments:
Post a Comment