முக்கிய அறிவிப்பு:

இத்தளத்தில் இடம்பெறும் இஸ்லாமிய ஆக்கங்களை பதிவிறக்கம் செய்யலாம், பிறருக்கு Facebook,Twitter, Whatsapp,Telegram etc., எந்த தளத்திலும் பகிரலாம், பிறர் பயன்பெற எந்த வகையிலும் எவரும் பயன்படுத்திக் கொள்ளலாம், எம்மிடம் அனுமதி பெற வேண்டியதில்லை. எம் மூலம் நீங்கள் அறிந்த செய்தி, உங்களால் பிறருக்கு எத்தி வைக்கப்படும் போது உங்களுக்கும் நன்மை உண்டு, எமக்கும் நன்மை உண்டு, அல்லாஹ் போதுமானவன். குறிப்பு: இத்தளத்தில் எம்மை அறியாமல் பலவீனமான செய்திகளோ, மொழிபெயர்ப்புத் தவறுகளோ, வேறு பிழைகளோ இடம் பெற்றிருப்பின் சுட்டிக் காட்டவும், இன்ஷா அல்லாஹ் திருத்திக் கொள்ளப்படும்.

Thursday, December 18, 2014

ஜனாஸா(இறந்தவருக்காக தொழும்) தொழுகை முறை :-

ஜனாஸா(இறந்தவருக்காக தொழும்) தொழுகை முறை :-
பிற தொழுகைகளைப் போலவே ஜனாஸா தொழுகைக்கும் உடல், உடை சுத்தமாக இருத்தல், உளு செய்தல், ஜனாஸா தொழுகைக்காக நிய்யத்து செய்தல், கிப்லாவை முன்னோக்குதல் போன்றவைகள் முக்கியமானதாகும்.
மய்யித் ஆணாக இருந்தால் இமாம் அதனுடைய தலைக்கு அருகிலும், பெண்ணாக இருந்தால் இமாம் அதற்கு மத்தியிலும் நிற்பார்.
தொழக் கூடியவர்கள் இமாமின் பின்னால் நிற்க வேண்டும்.
ஜனாஸா தொழுகைக்கு இமாம் நான்கு தக்பீர் கூறுவார், இது நின்று தொழும் தொழுகை, இதில் ருகூ, சுஜூத் இல்லை.

1.முதல் தக்பீருக்குப் பின்,
அவூது பிஸ்மியுடன் அல்ஹம்து அத்தியாயத்தை (சூரத்துல் ஃபாத்திஹா ) ஓத வேண்டும்.
ஆதாரம்:- புகாரி, 1335

2.இரண்டாம் தக்பீருக்கு பின்,
(ஒவ்வொரு தக்பீருக்கும் கையை உயர்த்த வேண்டியதில்லை)
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து கூற வேண்டும்
”அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத் அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத்.”
பொருள்: இறைவா! இப்றாஹீம்(அலை) அவர்கள் மீதும் இப்றாஹீம்(அலை) அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ அருள் புரிந்ததைப்போல், முஹம்மது  அவர்களின் மீதும், முஹம்மது  அவர்களின் குடும்பத்தார்மீதும் நீ அருள்புரிவாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவனாகவும், கண்ணியத்திற்குரியவனாகவும் இருக்கிறாய்.
இறைவா இப்றாஹீம்(அலை) அவர்களுக்கும், இப்றாஹீம்(அலை) அவர்களின் குடும்பத்தாருக்கும் நீ விருத்தி செய்ததுபோல் முஹம்மத்  அவர்களுக்கும், முஹம்மத்  அவர்களின் குடும்பத்தாருக்கும் விருத்தி செய்வாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரிவனாகவும், கண்ணியத்திற் குரியவனாகவும் இருக்கிறாய்.
ஆதார நூல்:- பைஹகி ,4/39

3 .மூன்றாவது தக்பீருக்கு பின்....
இறந்தவரின் பாவமன்னிப்புக்காகவும், மறுமை நன்மைக்காகவும் துஆச் செய்ய வேண்டும். ஜனாஸா தொழுகையின் போது நபி(ஸல்) அவர்கள் பல்வேறு துஆக்களை கேட்டுள்ளார்கள். அவற்றில் இயன்றதை நாம் ஓதிக் கொள்ளலாம்.
அதில் ஒன்று,
அல்லாஹும்மஃபிர் லஹு வர்ஹம்ஹு வஆஃபிஹி வஃபு அன்ஹு வஅக்ரிம் நுஸுலஹு வவஸ்ஸிஃ முத்கலஹு வக்ஸில்ஹு பில்மாயி வஸ்ஸல்ஜி வல்பரத் அப்யளு மினத் தனஸ் வஅப்தில்ஹு தாரன் ஃகைரன் மின் தாரிஹி வஅஹ்லன் ஃகைரன் மின் அஹ்லிஹி வஸவ்ஜன் ஃகைரன் மின் ஸவ்ஜிஹி வஅத்கில்ஹுல் ஜன்ன(த்)த வஅயித்ஹு மின் அதாபில் கப்ர் வமின் அதாபின்னார்
அறிவிப்பவர்:- அவ்ஃப் பின் மாலிக்(ரலி)
முஸ்லிம்: 1601
பொருள்: இறைவா..!
இவரை மன்னித்து அருள் புரிவாயாக..!
இவரது பிழை பொறுத்து சுகமளிப்பாயாக..!
இவர் செல்லுமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக..!
இவர் புகும் இடத்தை விசாலமாக்கி வைப்பாயாக..!
பனிகட்டி, ஆலங்கட்டி மற்றும் தண்ணீரால் இவரது பாவங்களைக் கழுவி தூய்மைப்படுத்துவாயாக..!
அழுக்கிலிருந்து வெள்ளை ஆடை சுத்தப்படுத்துவதைப் போல், இவரது பாவத்திலிருந்து இவரை சுத்தப்படுத்துவாயாக..!
கப்ரின் வேதனையை விட்டும், நரகத்தின் வேதனையை விட்டும் இவரை பாதுகாத்து இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக...!

4. நான்காம் தக்பீருக்குப் பிறகு சிறிது நேரம் நின்று விட்டு சலாம் கொடுக்க வேண்டும்.
(குறிப்பு: ஒரு சலாம் மட்டுமா அல்லது இரண்டு சலாம் கொடுக்க வேண்டுமா என்பதில் அறிஞர்களிடையில் கருத்து வேறுபாடு உள்ளது.)

No comments:

Post a Comment

Moon Phases

Quran Search

Search in the Quran
Search in the Quran:
in
Download Islamic Softwares FREE | Free Code
தமிழில் தேட http://www.tamililquran.com/quransearch.php

Hadith Search

Search in the Hadith
Search:
in
Download | Free Code
தமிழில் தேட http://www.tamililquran.com/bukharisearch.php

Muslim Baby Names for Boys and Girls

Search Muslim Baby Names for Boys and Girls
Find Name:
Show all the Boy Names
A B C D E F G H I J K L M N
O P Q R S T U V W X Y Z
Show all the Girl Names
A B C D E F G H I J K L M N
O P Q R S T U V W X Y Z

English to Arabic to English Dictionary

English to Arabic to English Dictionary
Find word:
Exact Word / Starting Word Sub Word
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Download Dictionary on Mobile Phone
www.SearchTruth.com