முக்கிய அறிவிப்பு:

இத்தளத்தில் இடம்பெறும் இஸ்லாமிய ஆக்கங்களை பதிவிறக்கம் செய்யலாம், பிறருக்கு Facebook,Twitter, Whatsapp,Telegram etc., எந்த தளத்திலும் பகிரலாம், பிறர் பயன்பெற எந்த வகையிலும் எவரும் பயன்படுத்திக் கொள்ளலாம், எம்மிடம் அனுமதி பெற வேண்டியதில்லை. எம் மூலம் நீங்கள் அறிந்த செய்தி, உங்களால் பிறருக்கு எத்தி வைக்கப்படும் போது உங்களுக்கும் நன்மை உண்டு, எமக்கும் நன்மை உண்டு, அல்லாஹ் போதுமானவன். குறிப்பு: இத்தளத்தில் எம்மை அறியாமல் பலவீனமான செய்திகளோ, மொழிபெயர்ப்புத் தவறுகளோ, வேறு பிழைகளோ இடம் பெற்றிருப்பின் சுட்டிக் காட்டவும், இன்ஷா அல்லாஹ் திருத்திக் கொள்ளப்படும்.

Sunday, November 30, 2014

ஷைத்தானின் நிபுணத்துவ வழி , ஜாக்கிரதை !!! (English)

வாலிபர்களே எச்சரிக்கை!!!

Share செய்யும் முன்...





Share செய்யும் முன்...
எதையும் ஆராய்ந்து பின்னரே மற்றவர்களுக்கு பகிரவும்,
இல்லை அமைதி காக்கவும்.

"
ஒருவர் தாம் கேள்விப்பட்டதை எல்லாம் (ஆராயாமல் பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போதுமான சான்றாகும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : முஸ்லிம்

1.
உணர்ச்சிப் பூர்வமான போட்டோ & வீடியோ - ரத்தம் தேவை - காணவில்லை மற்றும்  எந்த செய்தியையும் தேதி குறிப்பிடாமல் இருந்தால் அதில் உள்ள தொலைபேசியிலோ, செய்தியை அனுப்பியவரிடமோ உறுதிப்படுத்தாமல் அனுப்ப வேண்டாம் இதனால் பழைய செய்திகளே மீண்டும் மீண்டும் சுற்றி வருகிறது.
2.
இதை பரப்பினால் அல்லது 10 பேருக்கு தெரிவித்தால் உங்களுக்கு நல்ல செய்தி வரும் என்பதை பரப்ப கூடாது இது மறைமுகமாக அல்லாஹ்வின் மீது இட்டுகட்டுவதாககும்
3.
பிறர் குறைகள், விமர்சனங்கள் பரப்ப கூடாது. அதை மறைக்க வேண்டுமென்ற மார்க்க போதனைகளை எப்போதும் மறந்து விடக்கூடாது.கமண்ட் பண்ணுவோர் பிறரை இழிவு படுத்தும் வகையில் வார்த்தைகளை உபயோகிப்பதும் இழிவு படுத்தும் ஃபோட்டோக்கள் போடுவதும் தவிர்க்கவும்.
4.
எந்த காரணத்திற்காகவும் சினிமா படங்களையும், பாடல்களையும்,பிறரை இழிவுபடுத்தும் கேளிக்கைகளையும்  பரப்ப இஸ்லாத்தில் அனுமதி இல்லை
எனக்கு பிடித்தபாடல் அல்லது படம் என்று சொல்லி நீங்களும் கேளுங்கள் / பாருங்கள் (Listening To, Watching) என்று இறைவன் தடுத்தவற்றை பரப்ப கூடாது. அதன் மூலம் உண்டாகும் பாவங்கள் அத்தனையும் உங்கள் கணக்கிலும் எழுத படும்.
5.
தனி நபர் போட்டோ தனியாகவும், செய்தி தனியாகவும் வந்தால் அச்செய்தியை பகிர்வதை தவிர்க்கவும், பிறர் அதை தவறாக திருத்தி செய்தி வெளியிட வாய்ப்பு உள்ளது.

இப்பொழுது மொபைல் சர்வ சாதாரணமாக நம் குழந்தைகள் கையில் வளம் வருகிறது. மொபைலில் வரும் போட்டோகள் வீடியோகளை அவர்களும் பார்க்கின்றனர். எனவே அவர்கள் மனநிலை பாதிக்கும் செய்திகள் Share செய்வதை தவிர்க்கவும்.

நல்லவற்றை / இறை நினைவூட்டும் விஷயங்களை ஷேர் செய்தால் அதன் மூலம் உண்டாகும் புண்ணியங்கள் உங்கள் கணக்கிலும் எழுதப்படும்.அதிலும் குர்ஆன் வசன எண்கள், ஹதீஸ் நூல் சரிதானா என்று ஆராய்ந்து பகிருங்கள்.

அல்லாஹ் (வானவர்களிடம்) கூறுகிறான்: என் அடியான் ஒரு தீமையைச் செய்ய நாடினால் அதை அவன் செய்யாத வரை அவனுக்கெதிராக அதைப் பதிவு செய்யாதீர்கள். அதை அவன் செய்தால் செய்த குற்றத்தை மட்டுமே பதிவு செய்யுங்கள். அதை அவன் எனக்காகவிட்டுவிட்டால் அதை அவனுக்கு ஒரு நன்மையாகப் பதிவு செய்யுங்கள். அவன் ஒரு நன்மை புரிய எண்ணிவிட்டாலே அதைச் செய்யாவிட்டாலும் கூட அவனுக்கு ஒரு நன்மையை எழுதுங்கள். அதை அவன் செய்துவிட்டாலோ அதை அவனுக்கு பத்து நன்மைகளிலிருந்து எழுநூறு நன்மைகளாக எழுதுங்கள்.
நூல் : புகாரி

இரகசியத்தை பேணுங்கள்.

Saturday, November 29, 2014

சந்தேகம் கொள்வது மிகப் பெரிய பொய்யாகும்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்
“(ஆதாரமில்லாமல் பிறரை) சந்தேகப்படுவது குறித்து உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில், சந்தேகம் கொள்வது மிகப் பெரிய பொய்யாகும். (பிறரின் குறையைத்) துருவித் துருவி ஆராயாதீர்கள். ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா ( ரழி )
நூல் : ஸஹீஹுல் புகாரி

தவறை ஏற்கும் மனப்பான்மை.

நல்ல பண்புகள் மறைந்து அடையாளமற்று போகின்றது



"சிலரிடம் உள்ள நல்ல பண்புகள்
மறைந்து அடையாளமற்று போகின்றது.
ஏனெனில்,
அவர்கள் பிறர் குறைகளை ஆராய்ந்து விமர்சிப்பதிலே நேரத்தை வீணடிக்கின்றனர்."

Friday, November 28, 2014

வெகுமதி :

"(உலகில் உள்ள)எந்த உயிரினத்துக்கு உதவி செய்தாலும், அதற்கு இறைவனிடம் வெகுமதி உண்டு" - நபிகள் நாயகம் (ஸல்).

அபூஹுரைரா ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்: "தாகித்திருந்த ஒரு நாயின் தாகத்தை தீர்ப்பதற்காக கிணற்றில் இறங்கி நீர் கொண்டுவந்து நாயின் தாகத்தைத் தீர்த்த மனிதனின் செயலை அல்லாஹ் நன்றியுடன் பொருந்திக் கொண்டு அவனின் பாவங்களை மன்னித்து விட்டான் " என்று பெருமானார் சொன்னபோது, "இறைத்தூதரே, விலங்குகளுக்கு உதவினாலும் அல்லாஹ்விடத்தில் வெகுமதி கிடைக்குமா?" என்று வினவியபோது, "ஆம்! விலங்குகளுக்கு உதவி செய்தாலும் வெகுமதியுண்டு" என்றார்கள். (புகாரி).

இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்:

"நீங்கள் நன்றி செலுத்தினால், உங்களுக்கு நிச்சயமாக நான் (என்னருளை) அதிகமாக்குவேன்; (அவ்வாறில்லாது) நீங்கள் மாறு செய்தீர்களானால் நிச்சயமாக என்னுடைய வேதனை மிகக் கடுமையானதாக இருக்கும்”
- குர்ஆன் 14:7.

உங்கள் பதிவு மற்றும் பின்னூட்டங்கள்:

உங்கள் பதிவு மற்றும் பின்னூட்டங்கள்:
நீங்கள் செய்யும் லைக், பகிர்தல் & கருத்துக்களுக்கு நீங்களே பொறுப்புதாரி.
அனைத்திற்கும் உங்கள் இறைவனால் கேள்வி கேட்கப்படுவீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஜாக்கிரதையாக கையாளுங்கள்!!!

Your Status & Comments:
You Will Be Accountable For What You Like, Share & Comment.
Remember You Will Be Questioned By Your Almighty For All.
Handle Carefully!!!
ஹதீஸ் 44 : ரியாளுஸ்ஸாலிஹீன் - Riyalus Saliheen.
அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்
(என் தாயார் உம்மு சுலைம் அவர்களின் இரண்டாவது கணவரான) அபூ தல்ஹா(ரலி) அவர்களின் புதல்வர் ஒவர் நோய்வாய்ப்பட்டு இருந்தார். (ஒரு முறை) அபூ தல்ஹா(ரலி) வெளியே செல்ல அப்போது அந்தப் பையன் இறந்துவிட்டான். அபூ தல்ஹா(ரலி) திரும்பி வந்தபோது 'என் மகன் என்ன ஆனான்?' என்று கேட்டார்கள். (அவரின் துணைவியார்) உம்மு சுலைம் (துக்கத்தை வெளிக்காட்டாமல்), 'அவன் முன்பைவிட நிம்மதியாக இருக்கிறான்' என்று பதிலளித்துவிட்டு, அவர்களுக்கு முன்னால் இரவு உணவை வைத்தார். அபூ தல்ஹா(ரலி) இரவு உணவை அருந்தினார்கள். பிறகு உம்மு சுலைம் அவர்களுடன் (அன்றிரவு) தாம்பத்திய உறவுகொண்டார்கள். உறவு கொண்டு முடித்தபோது, உம்மு சுலைம் அவர்கள் (தம் கணவரிடம்) 'பையனை அடக்கம் செய்(ய ஏற்பாடு செய்)யுங்கள்' என்று கூறினார்கள். விடிந்ததும் அபூ தல்ஹா(ரலி) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்று (நடந்ததைத்) தெரிவித்தார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இன்றிரவு தாம்பத்திய உறவுகொண்டீர்களா?' எனக் கேட்டார்கள். அபூ தல்ஹா(ரலி), 'ஆம்' என்றார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இறைவா! அவர்களின் இரவில் அவர்கள் இருவருக்கும் சுபிட்சம் வழங்குவாயாக' என்று பிரார்த்தித்தார்கள்.5 பின்னர் உம்முசுலைம்(ரலி) ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தார்கள். என்னிடம் அபூ தல்ஹா(ரலி), 'குழந்தையை நபி(ஸல்) அவர்களிடம் பத்திரமாகக் கொண்டுசெல்' என்று கூறினார்கள். அவ்வாறே நான் குழந்தையை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டுசென்றேன். என்னிடம் உம்மு சுலைம்(ரலி) பேரீச்சம் பழங்கள் சிலவற்றைக் கொடுத்தனுப்பியிருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் குழந்தையை வாங்கிக்கொண்டு, 'இக்குழந்தையுடன் ஏதேனும் (இனிப்புப்) பொருள் உள்ளதா?' என்று கேட்டார்கள். (அங்கிருந்த) மக்கள் 'ஆம்; பேரீச்சம் பழங்கள் உள்ளன' என்று பதிலளித்தார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் அதை வாங்கி (தம் வாயால்) மென்று பிறகு தம் வாயிலிருந்து அதை எடுத்துக் குழந்தையின் வாயில் வைத்து அதைத் தடவினார்கள். குழந்தைக்கு 'அப்துல்லாஹ்' எனப் பெயர் சூட்டினார்கள்.
இதே ஹதீஸ் அனஸ்(ரலி) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர் தொடர்வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நூல்: புகாரி 5470.

உன் சகோதரர்களுக்கு நீ என்ன கொடுத்தாய்?

உன் சகோதரர்களுக்கு நீ என்ன கொடுத்தாய்?
-- ஷேய்க் காலித் அல்-ரஷித்.
_________________________________________
நாம் அவர்களுக்கு என்ன கொடுத்தோம்?
மேலும், எங்கே சென்றது "லா இலாஹா இல்லல்லாஹ்" வின் உரிமைகள்.
நபி(ஸல்) அவர்களின் மீது உள்ள அன்பின் காரணமாக,
அவர்களின் ஒவ்வொரு வீட்டிலும் ஒன்றுக்கு மேற்பட்ட "முஹம்மது" இருப்பார்கள்.
எனவே, அவர்கள் பெயரை "முதல் முஹம்மது" என்றும்
மற்றும் "இரண்டாம் முஹம்மது"
மற்றும் "மூன்றாம் முஹம்மது"
மற்றும் கூட "நான்காம்"!
அதனால், ஓ! முஹம்மது சமுதாயமே!
உன் சகோதரர்களுக்கு நீ என்ன கொடுத்தாய்?
அல்லாஹ் உங்களுக்கு முஹம்மது பற்றியும், அவரது சமுதாயத்தை பற்றியும் அறிவிக்க வில்லையா?
"முஹம்மது நபி அல்லாஹ்வின் இறை தூதர்,
மேலும் அவருடைய சமுதயாத்தோர்
இறை நிரகாரிப்போர் மீது கடுமையாகவும்,
அவர்கள் ஒருவருக்கொருவரிடையே இரக்க குணமுள்ளவர்களாக இருப்பர்.”

நபி (ஸல்) அவர்கள் கூறவில்லையா, "பூமியில் உள்ளவர்கள் மீது நீங்கள் இரக்கம் காட்டுங்கள். வானில் இருப்பவன் (அல்லாஹ்) உங்கள் மீது இரக்கம் காட்டுவான்".?
"பூமியில் உள்ளவர்கள் மீது நீங்கள் இரக்கம் காட்டுங்கள்.
வானில் இருப்பவன் (அல்லாஹ்) உங்கள் மீது இரக்கம் காட்டுவான்"

உங்கள் சகோதரர்களை மீட்பாயாக (தொண்டுகள் மூலம்)!
உங்கள் சகோதரர்களை மீட்பாயாக (தொண்டுகள் மூலம்)!

Thursday, November 27, 2014

ஆதாரமில்லாமல் பிறரை சந்தேகப் படாதீர்கள்:




அல்லாஹ் நாடியதே நடக்கும்.

அல்லாஹ் நாடியதே நடக்கும்.

இன்றைய கேள்வி:
இறை நினைவில் இருந்து திருப்பி நரகத்திற்கு அழைத்து செல்லும் வழிகேடு என அல்லாஹ் எச்சரிப்பது எதைப் பற்றி ?

பதில்:
பேராசை.

ஸூரத்துத் தகாஸுர்(பேராசை) குர்ஆன் 102:1-8
"நீங்கள் கப்ருகளைச் சந்திக்கும் வரையில் (பொருளை) அதிகப்படுத்திக் கொள்ளும் பேராசை (அல்லாஹ்வை விட்டும்) உங்களைப் பராக்காக்கிவிட்டது (திருப்பிவிட்டது).நீங்கள் நினைப்பது போன்றல்ல. (அவை என்ன என்பதை) பின்னர் நீங்கள் நன்கறிந்து கொள்வீர்கள்.நீங்கள் நினைப்பது போன்றல்ல. (அவைகளின் பலன்களையும் பின்னர்) நீங்கள் நன்கறிந்து கொள்வீர்கள்.நீங்கள் நினைப்பது போன்றல்ல. (அதன் பலனைச்) சந்தேகமற நீங்கள் அறிவீர்களாயின்,நிச்சயமாக நரகத்தையே நீங்கள் (உங்கள் கண் முன்) காண்பீர்கள்.சந்தேகமற, மெய்யாகவே அதனை நீங்கள் உங்கள் கண்ணால் கண்டுகொள்வீர்கள்.(உங்களுக்கு இறைவன் புரிந்த) அருளை (நீங்கள் எவ்வழியில் செலவு செய்தீர்கள் என்பதை)ப் பற்றியும், பின்னர் அந்நாளில் நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள்.

Wednesday, November 26, 2014

இன்றைய கேள்வி:
'பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்' இரண்டுமுறை இடம் பெற்றுள்ள சூரா எது?

பதில்: ஸூரத்துந் நம்லி(எறும்புகள்).
முதல் பிஸ்மில்லாஹ் தொடக்கத்தில், இரண்டாவது பிஸ்மில்லாஹ் உள்ள வசனம் 27:30 "மெய்யாகவே அது ஸுலைமானிடமிருந்து வந்துள்ளது. நிச்சயமாக அ(தன் ஆரம்பத்)தில் "பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்" என்றெழுதி.
இன்றைய கேள்வி:
சுவர்க்கத்திற்கு போவதற்கு முன் எந்த நீருற்றில் நீர் புகட்டப்படும்?

பதில்: ஹவ்லுல் கவ்சர் என்ற தடாகம். ஹதீஸ்: “ஹவ்ளுல் கவ்ஸரில் நான்தான் உங்களுக்கு விருந்தோம்புபவனாக இருப்பேன். அப்பொழுது உங்களில் சிலர் என்னிடம் கொணரப்படுவீர்கள். நான் அவர்களுக்குத் தண்ணீர் கொடுக்க அவர்களின் பக்கம் குனியும் போது, அவர்கள் என்னை விட்டும் அப்புறப்படுத்தப் படுவார்கள். அப்பொழுது நான், “இறைவனே! இவர்கள் என் தோழர்களாயிற்றே!” என்று கூறுவேன். அதற்கு, “நிச்சயமாக, இவர்கள் தங்களுக்குப் பின் என்னவென்ன புதுமைகளை மார்க்கத்தில் உண்டுபண்ணினார்கள் என்று தாங்கள் அறியமாட்டீர்கள்” என்று கூறப்படும். எனவே நான், “தூரமாகிவிடுங்கள்: தூரமாகிவிடுங்கள். எனக்குப் பின் (என் மார்க்கத்தை) மாற்றியவர்கள் (நீங்கள்) எனக் கூறுவேன்” எனக் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். நூல்: புகாரீ, முஸ்லிம். )
இன்றைய கேள்வி:
மர்யம்(அலை) அவர்களின் பாதுகாவலர் யார்?

பதில்:
ஜகரிய்யா அலைஹிஸ் ஸலாம். குர்ஆன் 3:37. அவளுடைய இறைவன் அவள் பிரார்த்தனையை அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான்; அக்குழந்தையை அழகாக
வளர்த்திடச் செய்தான்; அதனை வளர்க்கும் பொறுப்பை ஜகரிய்யா
ஏற்றுக்கொள்ளும்படி செய்தான்.
இன்றைய கேள்வி:
திருக்குர்ஆனில் இடம்பெற்றுள்ள நபித்தோழர் யார்?

பதில்:
ஜைத் பின் ஹாரித் (ரலி). குர்ஆனில் சூராஹ் அஹ்ஜாப் (33:37) இடம்பெற்றுள்ளது.
இன்றைய கேள்வி:
நரகத்தின் அடிப்பகுதிக்கு போடப்படுபவர்கள் யார்?

பதில்:
நயவஞ்சகர்கள்.
அல்லாஹ் இதை பற்றி குர்ஆனில் ஸூரத்துன்னிஸாவில் கூறுகின்றான்.
"நிச்சயமக நயவஞ்சகர்கள் நரகத்தின் அடித்தட்டில் இருப்பார்கள். அவர்களுக்கு எந்த உதவியாளரையும் நீர் காணமாட்டீர்."
அல்குர்ஆன் 4:145
இன்றைய கேள்வி:
அல்லாஹ்வால் பெயர் சூட்டப்பட்ட நபி யார் ?

பதில்:
இதற்கான விடைகள் பின்வருமாறு.
1. நபி யஹ்யா அலைஹிஸ்ஸலாம்.
குர்ஆன் 19:7. (அதற்கு இறைவன் அவரை நோக்கி) "ஜகரிய்யாவே! நிச்சயமாக நாம் "யஹ்யா" என்ற பெயர் கொண்ட ஒரு மகனை(த் தருவதாக) உங்களுக்கு நற்செய்தி கூறுகிறோம். அப்பெயர் கொண்ட ஒருவரையும் இதற்கு முன் நாம் படைக்கவில்லை" (என்று இறைவன் கூறினான்)
2. நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம்.
குர்ஆன் 3:45. (மேலும், மர்யமை நோக்கி) மலக்குகள் "மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னுடைய (ஆகுக! என்ற) ஒரு வார்த்தையைக் கொண்டு உங்களுக்கு (ஒரு குழந்தையை அளிக்க) நற்செய்தி கூறுகின்றான்" என்றும் "அதன் பெயர் அல் மஸீஹ் ஈஸா இப்னு மர்யம்" என்பதாகும். அவர் இம்மை மறுமையில் மிக்க கம்பீரமானவராகவும், (இறைவனுக்கு) மிக்க நெருங்கியவர்களில் ஒருவராகவும் இருப்பார்" என்றும் கூறினார்கள்.
3. நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம். (முதல் மனிதர் என்பதால் அல்லாஹ் தான் ஆதம் என்று பெயரை குறிப்பிடுகிறான்) (சில அறிஞர்களின் கூற்றுப்படி)
குர்ஆன் 90:3. (மனிதர்களின்) பெற்றோர் (ஆகிய ஆதம்) ...
(அல்லாஹ் மிக அறிந்தவன்)
இன்றைய கேள்வி:
திருக்குர்ஆனில் இடம்பெற்றுள்ள பெண்ணின் பெயர் என்ன??

பதில்:
மர்யம் அலைஹிஸ்ஸலாம்.
இவரை குறித்து ஒரு அத்தியாயம் ஸூரத்து மர்யம் என்ற பெயரில் குர்ஆனில் உள்ளது.
குர்ஆன் 19:22: "அப்பால், மர்யம் ஈஸாவை கருக்கொண்டார்; பின்னர் கர்ப்பத்துடன் தொலைவிலுள்ள ஓரிடத்தை சென்றடைந்தார்."
இன்றைய கேள்வி:
நபி(ஸல்) தமது வாழ்நாளில் ஒரு முறை தொழுகையை மறதியாக சுருக்கி தொழுத போது
"அல்லாஹ்வின் தூதரே! தொழுகை குறைக்கப்பட்டுவிட்டதா?
அல்லது தாங்கள் மறந்துவிட்டீர்களா?“
என்று வினவிய நபி தோழர் யார்?

பதில்:
துல்யதைன் (கிர்பாக் பின் அம்ர்-ரலி)
புகாரி 999.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு மதியத் தொழுகைகளில் ஒன்றை (லுஹர் அல்லது அஸ்ர் தொழுகையைத்) தொழுவிக்கும்போது இரண்டு ரக்அத் முடிந்த உடனே சலாம் கொடுத்துவிட்டார்கள். பிறகு பள்ளிவாசலின் கிப்லாத் திசையிலிருந்த ஒரு பேரீச்சம் கட்டைக்கு வந்து அதன்மீது சாய்ந்து கொண்டார்கள். அப்போது ஏதோ கோபத்தில் இருந்தார்கள். மக்களிடையேயிருந்த அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் நபியவர்களிடம் பேச்சுக்கொடுக்க அஞ்சினர். மக்களில் தொழுதுவிட்டு விரைந்து செல்பவர்கள் "தொழுகை குறைக்கப்பட்டுவிட்டது" என்று புறப்பட்டுச் சென்றும்விட்டனர்.
இந்நிலையில் "துல்யதைன்" (கிர்பாக் பின் அம்ர்-ரலி) என்பவர் எழுந்து, "அல்லாஹ்வின் தூதரே! தொழுகை குறைக்கப்பட்டுவிட்டதா? அல்லது தாங்கள் மறந்துவிட்டீர்களா?" என்று கேட்டார். உடனே நபி (ஸல்) அவர்கள் வலப் பக்கமும் இடப் பக்கமும் (திரும்பிப்) பார்த்தார்கள். பிறகு "துல்யதைன் என்ன சொல்கிறார்?"" என்று கேட்டார்கள். மக்கள் "(ஆம்) அவர் சொல்வது உண்மைதான். தாங்கள் இரு ரக்அத்கள்தாம் தொழுவித்தீர்கள்"" என்று கூறினர். உடனே நபி (ஸல்) அவர்கள் மேலும் இரு ரக்அத்கள் தொழுவித்துவிட்டு சலாம் கொடுத்தார்கள். பிறகு தக்பீர் சொல்லி ஒரு சஜ்தாச் செய்துவிட்டு மற்றொரு தக்பீர் சொல்லி எழுந்(து அமர்ந்)தார்கள். பிறகு இன்னொரு தக்பீர் சொல்லி மற்றொரு சஜ்தாச் செய்தார்கள். பிறகு தக்பீர் சொல்லிவிட்டு எழுந்துவிட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்களது அறிவிப்பில் "(இறுதியில்) சலாம் கொடுத்தார்கள்"" என்றும் இடம்பெற்றுள்ளது.
இன்றைய கேள்வி:
“நபி (ஸல்) அவர்களால் கட்டப்பட்ட
இஸ்லாத்தின் முதல் பள்ளிவாசல் எது”?

பதில்:
மஸ்ஜிதுல் குபா.
நபி (ஸல்) குபாவில் திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நான்கு நாட்கள் தங்கியிருந்தார்கள். (இப்னு ஹிஷாம்)
அப்போது குபாவில் ஒரு பள்ளியை நிர்மாணித்து அதில் தொழ வைத்தார்கள்.
குபாவில் கட்டப்பட்ட பள்ளிதான் நபித்துவத்திற்கு பிறகு இறையச்சத்துடன் கட்டப்பட்ட முதல் பள்ளியாகும். நபி (ஸல்) பயணித்துக் கொண்டிருக்கும்போது ஸாலிம் இப்னு அவ்ஃப் கிளையினர் வசிக்கும் இடம் வந்தபோது ஜுமுஆ” தொழுகைக்கான நேரமும் ஆகிவிட்டதால் ‘பத்னுல் வாதி’ என்ற இடத்தில் அனைவரையும் ஒன்று சேர்த்து நபி (ஸல்) ஜுமுஆ தொழுகை நடத்தினார்கள். (அந்த இடத்தில் இன்று பள்ளிவாசல் கட்டப்பட்டுள்ளது) மொத்தம் நூறு நபர்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதார்கள்.
(இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது)
இன்றைய கேள்வி:
“நபி (ஸல்) அவர்களின் மரணத்தை நபித்தோழர்களுக்கு உணர்த்திட அபூபக்கர்(ரலி) அவர்கள் ஓதிய குர்ஆன் வசனம் எது”?

பதில்:
அல்குர்ஆன் 39:30 & 3:144.

புகாரி 3668: அப்போது, அபூ பக்ர்(ரலி) அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனைப் போற்றிவிட்டு, 'முஹம்மத்(ஸல்) அவர்களை வணங்கிக் கொண்டிருந்தவர், முஹம்மத்(ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள் என்பதை அறிந்து கொள்ளட்டும். அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருந்தவர்' அல்லாஹ் (என்றும்) உயிர் வாழ்பவன்; அவன் இறக்கமாட்டான் என்பதைப் புரிந்து கொள்ளட்டும்" என்று கூறினார்கள். மேலும், 'நபியே! நீங்களும் இறப்பவர் தாம்; அவர்களும் இறப்பவர்களே' என்னும் (திருக்குர்ஆன் 39:30-ம்) இறை வசனத்தையும், 'முஹம்மது ஓர் இறைத் தூதரேயன்றி வேறில்லை. அவருக்கு முன்னரும் கூட பல இறைத்தூதர்கள் (வந்து) சென்றிருக்கிறார்கள். எனவே, அவர் இறந்துவிட்டாலோ, (போரில்) கொல்லப்பட்டுவிட்டாலோ நீங்கள் உங்கள் கால் சுவடுகளின் வழியே (பழைய மதத்திற்கே) திரும்பிச் சென்று விடுவீர்களா? (நினைவிருக்கட்டும்:) எவன் அவ்வாறு திரும்பிச் செல்கிறானோ அவனால் அல்லாஹ்விற்கு எத்தகைய தீங்கும் செய்துவிட முடியாது. நன்றி செலுத்தி வாழ்பவர்களுக்கு அல்லாஹ் அதற்குரிய பிரதி பலனை மிக விரைவில் வழங்குவான்' என்னும் (திருக்குர்ஆன் 03:144-ம்) இறை வசனத்தையும் ஓதினார்கள். உடனே மக்கள் (துக்கத்தால் தொண்டையடைக்க) விம்மியழுதார்கள்.....
இன்றைய கேள்வி:
நல்லவை மற்றும் தீயவைகளை பதிவு செய்யும் மலக்குகளின் பெயர் என்ன ?
பதில்:
كِرَامًا كَاتِبِينَ
"கிராமன் காதிபீன்"
82:11 அவர்களோ கண்ணியமிக்க எழுத்தர்களாவர்;

அல் குர்ஆன்: 82:10-12.
82:10. நிச்சயமாக உங்கள் மீது கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
82:11. அவர்களோ கண்ணியமிக்க எழுத்தர்களாவர்;
82:12. உங்களுடைய ஒவ்வொரு செயலையும் அறிகின்றார்கள்.
இன்றைய கேள்வி:
இஸ்லாத்தை ஏற்பதை மஹராக(மணக்கொடையாக)
வழங்க சம்மதித்த நபித்தோழர் யார்?
அதை கேட்ட பெண்மணி யார் ?

பதில்:
அபூ தல்ஹா(ரலி), உம்மு ஸுலைம் (ரலி).
நாயகத்தோழி உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள், அபூதல்ஹா என்பவர் தம்மை மணம் செய்ய விரும்பியபோது ‘நீர் முஸ்லிமானால் அதுவே எனக்கு மஹராகும் அதைத்தவிர வேறு எதையும் மஹராகக் கேட்க மாட்டேன்’ எனக் கூறினார்கள்.
’இஸ்லாத்தை ஏற்பதையே மஹராக இருந்தது’ என அவரது மகன் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஆதாரம்: நஸயீ.
இன்றைய கேள்வி:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அளப்பெரிய தாக்கத்தை உண்டாக்கிய இரண்டு மரணங்கள் எது?
அந்த ஆண்டை எவ்வாறு வரலாற்றாசிரியர்கள் அழைக்கிறார்கள்?

பதில்:
பெரிய தந்தை அபூ தாலிப் மற்றும் நபிகளாரின் மனைவி கதீஜா(ரலி) ஆகிய இரண்டு மரணங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அளப்பெரிய தாக்கத்தை உண்டாக்கியது. இவ்விரண்டு மரணங்கள் நடைபெற்ற ஆண்டை
‘ஆமுல் ஹுஸ்ன்’ கவலை ஆண்டு என வரலாற்றாசிரியர்கள் அழைத்தனர்.
இன்றைய கேள்வி:
முதலாவது கிப்லா எது?
சுமார் எத்தனை மாதங்களாக முதல் கிப்லாவை நோக்கி முஸ்லிம்கள் தொழுது வந்தனர்?

பதில்:
முதலாவது கிப்லா "பைத்துல் முகத்தஸ்"(பாலஸ்தீன் உள்ள மஸ்ஜித் அல் அக்ஸா).
சுமார் பதினாறு அல்லது பதினேழு மாதங்கள் மாதங்களாக முதல் கிப்லாவை நோக்கி முஸ்லிம்கள் தொழுது வந்தனர்.

புகாரி 399. 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பதினாறு அல்லது பதினேழு மாதங்கள் பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழுதார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கஅபாவை நோக்கித் தொழ வேண்டுமென ஆசைப்பட்டார்கள். அப்போது 'நீர் வானத்தை நோக்கி உம்முடைய முகத்தைத் திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டிருப்பதை அறிவோம்' (திருக்குர்ஆன் 02:144) என்ற வசனத்தை அல்லாஹ் அருளினான். உடனே கஅபாவை முன்னோக்கித் தொழ ஆரம்பித்தார்கள். '(யூதர்களின் சில அறிவீனர்கள்) அவர்கள் முன்னர் நோக்கியிருந்த கிப்லாவைவிட்டுத் திருப்பிவிட்டது எது? என்று கேட்கின்றனர். 'கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியன. தான் நாடியோரை அவன் நேர்வழியில் நடத்துவான்' என்று (நபியே!) கூறும்!' (திருக்குர்ஆன் 02:142) என்ற வசனம் அருளப்பட்டதும் ஒருவர் நபி(ஸல்) அவர்களுடன் தொழுதுவிட்டு வெளியே வந்து அன்ஸாரிக் கூட்டத்தாரிடம் சென்றார். அவர்கள் பைத்துல் முகத்தஸை நோக்கி அஸர் தொழுது கொண்டிருந்தபோது, 'நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் தொழுதேன். அவர்கள் கஅபாவை முன்னோக்கித் தொழுதார்கள் என்று நான் சாட்சி சொல்கிறேன்' என்று அவர் அவர்களிடம் கூறினார். உடனே தொழுது கொண்டிருந்தவர்கள் கஅபாவை முன்னோக்கித் திரும்பினார்கள்" என பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.
இன்றைய கேள்வி:
இம்மையில் ஆணவம் கொண்ட பெருமைக்காரர்களின் பெயர் எவர்களின் பட்டியலோடு சேர்த்து எழுதப்படும்?

பதில்:
ஃபிர்அவ்ன், ஹாமான், காரூண்,நம்ரூது.

அல்குர்ஆன் 29:39. "இன்னும் ஃகாரூனையும், ஃபிர்அவ்னையும், ஹாமானையும் (அழித்தோம்); திடனாக, அவர்களிடம் மூஸா தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தார்; எனினும், (அவற்றை நிராகரித்து) அவர்கள் பூமியில் பெருமையடித்து நின்றார்கள். ஆனால் அவர்கள் (அழிவிலிருந்து) தப்பித்தார்களில்லை"

'மனிதன் தன்னையே தான் புகழ்ந்து உயர்வுபடுத்திக் கொண்டு பெருமை அடித்துக் கொள்வதில்
எப்பொழுதும் ஈடுபட்டுள்ளான். எனவே அவனுடைய பெயரை அநியாயக்காரர்களான
பெருமைக்காரர்கள் என்று (பிர்அவ்ன், ஹாமான், காரூன், நம்ரூது ஆகியவர்களின்
பட்டியலில்) எழுதப்படும். அவர்கள் அடைந்த கேட்டினை இவர்களும் அடைவார்கள் என்று
நபி(ஸல்) கூறினர்.
(ஸல்மதுப்னுல் அக்வஃ (ரழி) திர்மிதீ அல்ஹதீஸ் 2324)
இன்றைய கேள்வி:
சாப்பிட்டும் வயிறு நிரம்பாதவர் என்ன செய்ய வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவுரை கூறினார்கள் ?

பதில்:
1.உண்ணும் போது உங்கள் உணவில் ஒன்று சேர்ந்து கொள்ளுங்கள்.
2.பிஸ்மில்லாஹ் கூறுங்கள்.

வஹ்ஷி இப்னு ஹர்ப் (ரலி) அறிவிக்கின்றார்கள்:
"இறைத்தூதர் அவர்களே!
நாங்கள் சாப்பிடுகிறோம் வயிறு நிறையவில்லை"
என்று நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் கேட்டனர்.
"நீங்கள் பிரிந்து கொண்டு சாப்பிடுகிறீர்களா?" என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.
"ஆம்" என அவர்கள் கூறினர்.
"நீங்கள் உண்ணும் போ
து உங்கள் உணவில் ஒன்று சேர்ந்து கொள்ளுங்கள்.
பிஸ்மில்லாஹ்(இறைவனின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)) கூறுங்கள்.
அதில் உங்களுக்கு அந்த உணவில் பரக்கத் (அபிவிருத்தி) செய்யப்படும்." என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: அபுதாவூத் 3764.

Tuesday, November 25, 2014

"மறுமையில் (செயல்களை குறித்து) முதல் விசாரணை தொழுகையைக் குறித்தே இருக்கும்"
என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

11:6. இன்னும், உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளாத எந்த உயிரினமும் பூமியில் இல்லை; மேலும் அவை வாழும் இடத்தையும் (இருக்கும்) இடத்தையும், அவை (மடிந்து) அடங்கும் இடத்தையும் அவன் அறிகிறான். இவையனைத்தும் (லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும்) தெளிவான புத்தகத்தில் (பதிவாகி) இருக்கின்றன.
''பத்து விஷயங்கள் இயற்கை மரபுகளில் அடங்கும். மீசையைக் கத்திரிப்பது,
தாடியை வளர்ப்பது,
பல் துலக்குவது,
நாசிக்கு நீர் செலுத்துவது,
நகங்களை வெட்டுவது,
விரல் கணுக்களைக் கழுவுவது,
அக்குள் முடிகளை அகற்றுவது,
மர்ம உறுப்பின் முடிகளை மழிப்பது,
(மல ஜலம் கழித்த பின்) தண்ணீரால் சுத்தப்படுத்துவது''
என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: முஸ்லிம்

இதன் அறிவிப்பாளரில் ஒருவரான
முஸ்அப் பின் ஷைபா (ரஹ்) அவர்கள்
''பத்தாவது விஷயத்தை நான் மறந்து விட்டேன்.
அது வாய் கொப்பளிப்பதாக இருக்கலாம்''
என்று கூறினார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளன.

** விருத்த சேதனம் செய்வது,
மீசையைக் கத்தரிப்பது,
தாடி வளர்ப்பது
இவை தவிர பிற மரபுகள்
ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானவை.

Sunday, November 23, 2014

நபி (ஸல்) அவர்களிடத்தில் பத்துப் பேர் கொண்ட ஒரு கூட்டம் வந்தது. அதில் ஒன்பது நபர்களிடத்தில் பைஅத் செய்தார்கள். ஒருவரிடத்தில் மட்டும் பைஅத் செய்யவில்லை. அப்போது அந்தக் கூட்டத்தினர், “ஒன்பது நபர்களிடத்தில் பைஅத் செய்தீர்கள். ஆனால் இவரிடத்தில் மட்டும் பைஅத் செய்யவில்லையே ஏன்?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவரிடத்தில் தாயத்து இருக்கிறது” என்று சொல்லி தன்னுடைய கையை நுழைத்து அதைத் துண்டித்தார்கள். பிறகு பைஅத் செய்தார்கள். பின்னர், "யார் தாயத்தைத் தொங்க விட்டுக் கொண்டாரோ அவர் இணை வைத்து விட்டார்" என்று கூறினார்கள். 
அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி) நூல்: அஹ்மத்
"நாம் நமது நாவை நன்மையானவைகளைக் கொண்டு ஆக்கிரமிக்காவிட்டால்,
நமது நாக்கு நன்மை அல்லாதவைகளின் மீது நம்மை ஆக்கிரமித்துக் கொள்ளும்."
நீங்கள் கூறுகிறீர்கள்:
“என் வாழ்க்கை
தோல்வி நிறைந்தது.”

இறைவன் கூறுகிறான்:
“இறைவன் உங்களுக்கு உதவி புரிந்தால் உங்களை வெற்றி கொள்பவர்கள் ஒருவருமில்லை...”
குர்ஆன் 3:160


நபி (ஸல்) அவர்கள், "மார்க்கம் (தீன்) என்பதே நலம்நாடுவது தான்''
என்று கூறினார்கள்.
நாங்கள்,"யாருக்கு (நலம் நாடுவது)?'' என்று கேட்டோம்.
நபி (ஸல்)அவர்கள், "அல்லாஹ்வுக்கும், அவனுடைய வேதத்துக்கும்,அவனுடைய தூதருக்கும், முஸ்லிம்களின் தலைவர்களுக்கும்,அவர்களில் பொதுமக்களுக்கும்''என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: தமீமுத் தாரீ (ரலி) நூல்: முஸ்லிம்

Saturday, November 22, 2014

2:115. "கிழக்கு திசையும் மேற்கு திசையும் அல்லாஹ்வுக்கே (உரியன).
ஆதலால் நீங்கள் எத்திசையை நோக்கினும் அது அல்லாஹ்வின் திசையே!
நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன்; மிக அறிந்தவன்."
49:13. மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்.

ஹிஜாப் :


Wednesday, November 19, 2014

"குளிர் காலத்தில் ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் வெளியே சென்றார்கள், இலைகள் மரங்களிலிருந்து உதிர்ந்து கொண்டிருந்தன, நபி (ஸல்) அவர்கள் அம்மரத்தின் இரு கிளைகளைத் தமது திருக்கரத்தால் பிடிக்க அவற்றின் இலைகள் மேலும் உதிர்ந்தன."அபூ தர்! என்று நபி (ஸல்) அவர்கள் என்னை அழைக்க, நான் "லப்பைக் யாரஸூலல்லாஹ்!'' என்றேன். "முஸ்லிமான அடியான் அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடித் தொழுதால் இம்மரத்திலிருந்து இலைகள் உதிர்வது போல், அவரது பாவங்களும் உதிர்ந்து விடுகின்றன'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என்பதாக ஹஜ்ரத் அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(முஸ்னத் அஹ்மத்)
"உங்களுக்கு (ஸலாம் எனும்) வாழ்த்துக் கூறப்பட்டால் நீங்கள் அதைவிட அழகிய முறையில் அல்லது (குறைந்தபட்சம்) அதைப் போன்றாவது பதில் வாழ்த்துக் கூறுங்கள்!
திண்ணமாக அல்லாஹ் ஒவ்வொரு செயலுக்கும் கணக்கு வாங்குபவனாய் இருக்கின்றான்."
குர்ஆன் 4:86
"ஒவ்வொரு மனிதனிடமும் உணர்வு என்ற அளவுகோல் இருக்கும் வரை தான் மனிதம் என்ற பெறுமானமும் இருக்கும்."
சில நேரங்களில்,
இறைவன் நீங்கள் வேண்டியதை தராமல் இருக்கலாம்,
ஆனால் மறவாதீர்கள்,
அவன் உங்களுக்கு தேவையானதை தந்துள்ளான் என்பதை.
இறைவன் கொடுத்த அருளுக்கு நன்றி செலுத்துங்கள்.

"...நீங்கள் (இறைவனுக்கு) நன்றி செலுத்துவீர்களாயின்,
உங்களைப் பற்றி அவன் திருப்தியடைவான்..."
- குர்ஆன் 39:7

Tuesday, November 18, 2014

"அல்லாஹ்வை நினைவூட்டச் செய்யும் ஒரு சோதனை,
அவனை மறக்கடிக்கச் செய்யும் ஒரு அருளை விட சிறந்ததாக இருக்கும்."
-அஷ்ஷெய்க் அப்துல் அஸீஸ் தரீபீ.

நீங்கள் கூறுகிறீர்கள்:
“நான் அழகாக இல்லை.”

இறைவன் கூறுகிறான்:
“நிச்சயமாக நாம் (இறைவன்) மனிதனை மிக்க அழகான அமைப்பில் படைத்திருக்கின்றோம்.”
குர்ஆன் 95:4

22:77. இறைநம்பிக்கை கொண்டவர்களே!
நீங்கள் ‘ருகூவும்’ ஸுஜூதும்* செய்யுங்கள். உங்கள் இறைவனுக்கு அடிபணியுங்கள். மேலும், நற்பணி ஆற்றுங்கள். (இதன் மூலமே) நீங்கள் வெற்றி அடையக்கூடும்!
'உங்களில் ஒருவர் தம் மனைவியுடன் உடலுறவு கொள்ளச் செல்லும்போது

بِسْمِ اللهِ اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ ، وَجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْـتَنَا

‘பிஸ்மில்லாஹி, அல்லாஹும்ம ஜன்னிப்னஷ் ஷைத்தான் வஜன்னிபிஷ் ஷைத்தான மாரஸக்தனா’

'அல்லாஹ்வின் திரு நாமத்தைக் கொண்டு உடலுறவு கொள்ளப் போகிறேன். இறைவா! எங்களைவிட்டு ஷைத்தானைத் தூரமாக்கு! (இந்த உறவு மூலம்) நீ எங்களுக்கு அளிக்கப் போகும் (குழந்தைப்) பேற்றிலும் ஷைத்தானை அப்புறப்படுத்து' என்று சொல்லிவிட்டு உறவு கொண்டு அதன் மூலம் அவ்விருவருக்கும் குழந்தை வழங்கப்படுமானால் அக்குழந்தைக்கு ஷைத்தான் எந்த தீங்கும் விளைவிப்பதில்லை'
என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி)
நூல்: புகாரி.

39:6. அவனே உங்களை ஒரே உயிரிலிருந்து படைத்தான். பின்னர் அவனே அந்த உயிரிலிருந்து அதன் துணையை உண்டாக்கினான். அவனே உங்களுக்காக எட்டு கால்நடைகளை இணைகளாகப் படைத்தான். அவன் உங்கள் அன்னையரின் வயிற்றில், மூன்று இருட்திரைகளினுள் ஒன்றன் பின் ஒன்றாக உங்களுக்கு வடிவம் கொடுத்துக் கொண்டிருக்கின்றான். (இந்தக் காரியங்கள் செய்கின்ற) அந்த அல்லாஹ்தான் உங்கள் இறைவனாவான். ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது. வணக்கத்திற்குரிய இறைவன் அவனைத் தவிர வேறு யாரும் இல்லை. பிறகு, நீங்கள் எங்கிருந்து திசை திருப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள்?

Monday, November 17, 2014


"புகழ் விரும்பியான மனிதன்
படைப்பினங்களை புகழ மறக்கவில்லை.
ஆனால்,
படைத்தவனைப் புகழ மறந்துவிட்டான்."
- அஷ் ஷெய்க் முதவல்லி ஷஃராவி

2:201 “ரப்பனா!(எங்கள் இறைவனே!)
எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக;
மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக;
இன்னும் எங்களை(நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!”

Sunday, November 16, 2014

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"மீசையை ஒட்டக் கத்தரியுங்கள். தாடியை வளர விடுங்கள். மஜூசி (நெருப்பு வணங்கிகளுக்கு)களுக்கு மாறு செய்யுங்கள்."

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம்

Moon Phases

Quran Search

Search in the Quran
Search in the Quran:
in
Download Islamic Softwares FREE | Free Code
தமிழில் தேட http://www.tamililquran.com/quransearch.php

Hadith Search

Search in the Hadith
Search:
in
Download | Free Code
தமிழில் தேட http://www.tamililquran.com/bukharisearch.php

Muslim Baby Names for Boys and Girls

Search Muslim Baby Names for Boys and Girls
Find Name:
Show all the Boy Names
A B C D E F G H I J K L M N
O P Q R S T U V W X Y Z
Show all the Girl Names
A B C D E F G H I J K L M N
O P Q R S T U V W X Y Z

English to Arabic to English Dictionary

English to Arabic to English Dictionary
Find word:
Exact Word / Starting Word Sub Word
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Download Dictionary on Mobile Phone
www.SearchTruth.com